உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ரோஜா இதழ்கள்

கள். காலடியில் மூட்டையை விட்டெறிந்து வெளியே துரத்து முன், “காதுத் திருகாணியைக் கழட்டி வச்சுட்டுப் போடி, கடன்காரி, உனக்கு ஒரு ஸ்நானம் பண்ணிடறேன் இப்பவே!” என்று கத்தினாள். ஆத்திரத்தோடு அவள் கால்சவரன் பெறாத அந்த மகிழம்பூத் திருகைக் கழற்றி மண்ணில் வீசி, காதலின் புனிதத்தை நிலைநாட்டுவதாகப் பெருமிதம் கொண்டாள்.

அவள் படித்த கதைகளில், காதலையும் தியாகத்தையும் வீரத்தையும் விளக்கும் சினிமாக்களில் வரும் கதாநாயகியாகத் தன்னை நினைத்துக் கொண்டாள். அந்த வாயிலை விட்டு வெளியேறி அவள் வந்தபோது, அவன் டீக்கடை வாயிலில்தான் நின்றான். அவளை உடனே தன் அறைக்குள் அழைத்துச் சென்று நெஞ்சு கூழாக அணைத்துக் கொண்டான். பதினாறு வருஷம் பழகிய வீட்டை ஒரு நொடியில் உதறுவதும், கையில் ஒரு காசு இன்றி வெளியிறங்குவதும் அந்த அரிய நேரத்துக்காகச் செய்த அற்பங்கள் என்று தோன்றியது.

“எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு விரட்டியடிச் சிட்டாங்க... ?”

“போனாப் போறாங்க, உன்னை விட்டாங்களே. அன்பே, இந்த உலகு நமக்குச் சொந்தம்; நீயே விலை மதிப்பில்லாத சொத்து எனக்கு...” என்று அவளை இன்ப உலகுக்கு இட்டுச் சென்றான்.

நீக்குப் போக்கற்ற பெருவெளியில் இருவரும் அலைமேல் அலையாய் ஒன்றி அந்த விடுதலை நேரத்தைக் கொண்டாடினார்கள். பிறகு தெற்கிருந்து வந்த பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு தேன்நிலவுக்கு வரும் தம்பதியைப்போல் ஏறி வந்தார்கள். இரவு இந்திரா கபே வாயிலில் இறங்குகையில் மணி எட்டேமுக்கால்.

நல்ல குளிர்காலம். அவர்கள் அறையிலேயே ரவா லட்டும் வெங்காய பகோடாவும், மலைப்பழமும் பாலும் உண்டார்கள். இப்போது நினைக்க அதெல்லாம் கற்கண்டு கட்டியைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/28&oldid=1099700" இலிருந்து மீள்விக்கப்பட்டது