உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ரோஜா இதழ்கள்

கல்லுக்கு முன்னே கருமணி கட்டி, கல்யாணம் முடிச்சானாம்” என்று தெரிவிக்கிறான்.

“அண்ணே, நான் ஒத்துக்க மாட்டேன். இது சீர்திருத்தக் கல்யாணமில்லே” என்று வம்பு செய்கிறாள் வடிவு.

“ஒத்துக்காட்டா வேண்டாம்...?” என்று புன்னகைக்கிறான் தனராஜ். பேபி அவனிடம் இருந்து இறங்கி தாயிடம் வருகிறாள்.

“நீ மாமனுக்குப் பேசிக் காட்டினியா...?” என்று கேட்கிறாள் வடிவு.

“பேசத் தெரியுமா?, ஐய, ஊமைன்னு நினைச்சேன் ?”

“நிசமா அண்ணே? மேடைப் பேச்சு வருது. உம்பொண்ணு இப்பவே பெரிய பேச்சாளியாயிட்டாளேன்னு அவரு சிரிக்கிறாரு. ஈரோட்டார் வீட்டு விசேஷத்துக்குப் போயிருந்தமா? அப்ப பெரியவங்கல்லாம் வந்து மண மக்களை வாழ்த்திப் பேசினாங்களா? அப்படியே வீட்டுக்கு வந்து பொடி பொடிக்கிது.”

“எங்கே, சொல்லும்மா !”

பேபி பதுங்கிக் கொள்கிறாள்.

“சொன்னியானா மாமன் இப்ப ஐஸ்கிரீம் வாங்கிவரும்” குழந்தை மழலை மாறாக் குரலில் பேசுகிறாள். மெதுவாக, தெளிவில்லாமலிருந்தாலும் புரிகிறது.

“தகைமை சார்ந்த தலைவர் அவர்களே, கண்ணினுமினிய நண்பர்களே, தோளோடிணைந்த தோழர்களே, அன்பு வணக்கம்...”

“ம், அப்புறம் ?”

...கோயிலில் இருக்கும் கல்லைக் காட்டி, உயிரில்லாத சடங்கு செய்து ஊரை ஏமாத்துபவன் யார்? தன்மானமுள்ள தமிழனை ஆதிக்கஞ் செலுத்தி அடக்கி ஒடுக்குபவன் யார்? ஒண்ட வந்தது பிடாரியாகி ஊர் மக்களைத் துரத்தியது எது?” ‘ஹ’ என்று அவர்கள் கைகொட்டி சிரிக்கின்றனர். பேபியை எடுத்துக்கொண்டு தனராஜ் முத்த மழை பொழிகிறான். இரத்தம் கன்றி அடித்துவிட்டாற் போல் குன்றிக் குறுகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/46&oldid=1101048" இலிருந்து மீள்விக்கப்பட்டது