உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ரோஜா இதழ்கள்

கண்டதில்லை. ஏனெனில் இந்த மாம்பாக்கம் வீட்டில்தான் அவள் மண்ணிலே விழுந்தாள். அவளுடைய பெரியக்காவுக்கு அப்போது திருமணமாகி ஆறேழு ஆண்டுகளாகியிருந்தன. அத்தை மகனையே கட்டியிருந்ததாலும் அந்த அத்தையே தாய்க்குப் பேறு பார்க்க வந்திருந்ததாலும், அவளும் அந்த வீட்டில்தான் அந்த நாளில் இருந்து உரிமை கொண்டாடியிருக்கிறாள். மைத்ரேயிக்குப் பிறப்பை அளித்த தாய், அவளுடைய அழுகைக் குரலைக் கேட்கக்கூட உயிர் தரித்தி ருக்கவில்லை. முதல் மனைவி, குடும்பத்தையே மறந்துவிட்டாராம் தந்தை. அந்நாளில் அந்த வீடு, இரண்டரை ஏகராபூமி, தோட்டம் இவற்றைப் பாதுகாத்து இக்குழந்தைகளைக் காப்பாற்றும் எண்ணத்துடன் அத்தையும் அவள் கணவரும், தங்கள் சொந்த ஊரான தஞ்சைப் பக்கத்தை விட்டு வந்தார்களாம். அவளுக்கு நினைவு தெரிந்து அக்காளின் கணவர் வேலைக்குப் போயிருக்கவில்லை. வயல், தேங்காய், மாங்காய் என்று அந்தச் சிறு பண்ணையை நிர்வகித்து வந்திருக்கிறார். அத்தானுக்கு உடன்பிறந்தவர்கள் என்று ஒரே ஒரு சோதரி தான் இருக்கிறாள். ஆனால், அத்தானின் தந்தை வழி பெரியப்பா பிள்ளைகள் டில்லியிலிருந்து இங்குவந்து போய் உறவு கொண்டாடுவார்கள். அதைத்தான் அன்று மாமா குறிப்பிட்டார்.

பழைய காலத்துச் சுற்றுப்புறச் சுவர் முன்பக்கம் மட்டும் பெரிய வாயிற்கதவைத் தாங்கி நிற்கிறது. அந்த வாயிற் கதவு வெயிலுக்கும் மழைக்கும் ஈடு கொடுத்துக் கொடுத்து, இனி இயலாதென்று ஒற்றைக் கீலுடன் உயிரைவிடத் தயாராக நிற்கிறது. அங்கிருந்து தோட்டப் பாதையாக, வீட்டு வாயில் வரையிலும் செல்ல இருநூறு கஜங்கள் தொலைவிருக்கும். மாவும் பலாவும் விரிக்கும் நிழலின் குளிர்ச்சி. அக்கா அந்நேரத்தில் வாசலில் கோலம் போட வந்திருக்கலாம். காப்பியை அத்திம்பேர்தான் போடுவார். மாடு கறந்து கொடுக்கும் சின்னு வந்திருப்பான்....

காதல் போதையில் மூழ்கியவளாய் அவள் அந்த வீட்டில் அடி வைத்தபோது விரட்டி அடித்தார்கள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/60&oldid=1099741" இலிருந்து மீள்விக்கப்பட்டது