பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

73

நெடுஞ்சாலையுடன் நடக்கிறார்கள். தார்போட்ட சாலையில் திரும்பிக் கிளை பிரியும் கடைத் தெருச் சந்நிதியில் பஸ் ஒன்று நிற்கிறது.

பஸ் நிற்குமிடத்துக்கே உரிய கலவைகள்; ‘பிறாமணாள் காபி ஓட்டல்’ என்று அறிவிக்கும் ஒரு ஓட்டுக்கூரைவிடுதி. அதன் எதிரில் ஒரு முடிதிருத்தகம். அதன் அருகில் நாலைந்து கடைகள்.

உருளைக்கிழங்கு, காய்ந்த பச்சைமிளகாய், வெங்காயம் போன்ற சாதனங்களைத் தட்டில் பரப்பிய ஒரு கறிகாய்ச் கடையை அடுத்து மாமிசக்கறிக் கடை. அவர்கள் கிளைச் சந்தைத் திரும்புகின்றனர். முனையில் ஒரு தேநீர்க்கடை இருக்கிறது. தேநீர்க்கடையை அடுத்து ஒரு தட்டிச் சார்ப்புக் கூரைக் கட்டிடத்தில் அண்ணா படம் போட்ட முகப்புடன் ‘அண்ணா படிப்பகம் விளங்குகிறது. அதை அடுத்து ஒரு சலவைச்சாலை. வாசலெல்லாம் அழுக்குத் துணிமூட்டைகளிலிருந்து பிரித்தெடுத்த குவியல்கள்.

அதை அடுத்து ஒரு பூவரச மரத்தடியில் இளைப்பாறும் நோஞ்சான் குதிரை அருகே குடை சாய்ந்தாற்போல் நிற்கும் வண்டியை இழுக்கக் கூடியதென்று விளங்குகிறது.

அதற்குப் பின்னே உள்ளடங்கினாற்போல் சில குடிசைகள் இருக்கின்றன. ஒன்றின் வாயிலில் இருந்து, பொம்மி சூணா வயிற்றுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து வரவேற்கிறாள். வாசலில் கோலி விளையாடும் சிறுவர்கள், “அம்மா வந்துட்டா, அம்மா வந்துட்டா!” என்று ஆர்ப்பரிக்கின்றனர்.

அந்தச் சூழல் அவர்களுடைய குலத்தோர்வதியும் இடங்களல்ல. அந்த உயர்குலத்தோர் வேருக்கு நீரின்றி மாய்ந்து சருகுகளாகப் பிழைப்புக்குப் பக்கம் பக்கமாகப் பறக்கத் தொடங்கியபின் தரம் பிரிக்க இயலாமல் வந்து ஒதுங்கிய இடமாகத்தான் கொள்ளலாம். வாயிலில் ஆரவாரம் கேட்டு உள்ளிருந்து முள் பூத்த வாயில் சேலையுடன் பதினெட்டு இருபது வயசு மதிக்கக்கூடிய மங்கையொருத்தி எட்டிப் பார்க்கிறாள். கழுத்தெலும்பு முட்டியிருந்தாலும், ஊட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/75&oldid=1123721" இலிருந்து மீள்விக்கப்பட்டது