பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ரோஜா இதழ்கள்

“ஹூம், ஸ்கூலுக்கு அப்ப போனேன், கப்பலூர்ல இருக்கறச்சே. நீ அந்தப் பங்களாவாத்துப் பொண்ணு தானே?”

மைத்ரேயி பேச்சை மாற்ற முயல்கிறாள்.

அதற்குள் பொம்மி அவளுடைய பர்சை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறாள். கைக்குழந்தை பெருங்குரலெடுத்து அழுகிறது.

“இது உங்களுடையதா அக்கா? சோக்கு வாசலில் கொண்டு வச்சிண்டு விளையாடிண்டிருக்கு?’

பர்சைச் சட்டென்று வாங்கிக்கொள்கிறாள். பரபரக்கும் விரல்களைப் பர்சுக்குள் விட்டுத் துழாவுகிறாள். அடிவயிற்றி லிருந்து கத்தி எழும்பிப் பாய்ந்தாற் போலிருக்கிறது. ஒரே ஒற்றை ரூபாய் நோட்டு மட்டும் இருக்கிறது. ஐம்பது ரூபாயில் அவள் செலவு செய்தது பதினோரு ரூபாய்தான். மீதி ஒரு ரூபாய் தானா? மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களும் ஒரு ஐந்து ரூபாய் நோட்டும் வைத்திருந்தாளே? சட்டென்று மூலையிலிருந்த பையை எடுத்து, உள்ளிருக்கும் துணிகளை எடுத்துப் போடுகிறாள். வாயிலில் வந்து நெடுகத் தேடுகிறாள். பணம் இல்லை.

பையில் இருந்த துணிகள், சாந்து, பவுடர் முதலிய பொருள்கள் எல்லாம் வெளியே கிடப்பதை அப்போதுதான் பார்க்கிறாள். பரபரப்பாக எல்லாவற்றையும் பைக்குள் போட்டு வாய் தெரியாமல் இழுத்துக் கட்டுகிறாள். அவன் வாங்கிக் கொடுத்த பை அது. பையின் புதுமை மாறுமுன் வாழ்க்கை வாடிவிட்டது. ‘நம்மாம்’ என்று மதுரம் இணைத்துப் போட்டுக் கொண்டதன் பொருள் மைத்ரேயியின் மூளையில் மின்னலாய் பளிச்சிடுகிறது. அவள் தோப்பு பங்களாவி லிருந்து பையனிடம் மூட்டையில் கட்டி அனுப்பிய அரிசியையும் தேங்காயையும் பையன் கடையில் போட்டுவிட்டான். அவள் பையை மதுரம் மாமிதானே எடுத்து வந்தாள்? ஈரத்தை வேறு உலர்த்தினாள். பணத்தை எப்போது அப்புறப் படுத்தினாளோ? அந்தப் பணம் அவள் சம்பாதித்த தொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/78&oldid=1123722" இலிருந்து மீள்விக்கப்பட்டது