பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

77

மில்லை. அம்மணி அம்மா கொடுத்ததுதான். மதுரம் மாமி வா, என்று அழைத்து அன்பு மொழியால் குளிர வைக்கிறாள். அவள் வாயிற்படியில் நிற்கையிலேயே வாயெல்லாம் பல்லாக விரைவு நடையிலேயே திரும்பி வருகிறாள். ஒரு கூடையில் அரிசி, பருப்பு, ஒரு குப்பியில் எண்ணெய், புளி, மிளகாய், மல்லி, ஒரு சிறு கட்டுப்பப்படம், வெங்காயம் எல்லாம் இருக்கின்றன.

சாமான்களைக் கொட்டிவிட்டுக் கூடையைப் பையனிடம் கொடுத்து அனுப்புகிறாள் மதுரம்.

“சோப்பு வாங்கிண்டு வந்தியாக்கா?” என்று கேட்கிறாள் சொர்ணம்.

“சோப்பா? போன வாரம்தானே வாங்கினேன்?” என்று திருப்பிக் கேட்கிறாள் மதுரம்.

“உன் பிள்ளை உடம்பிலே போட்டு அழுத்தி அழுத்தித் தேய்க்கறதிலே சோப்பு ஒரு மாசம் இருக்காதோ, பின்ன?”

“அடி கடங்காரி! உன் பிள்ளை உன் பிள்ளைன்னு ஏண்டி கரிக்கறே? அவன் உடம்புழச்சுக் கொண்டு வந்து கொட்டறான் இந்தக் குடும்பத்துக்கு, எல்லாரும் தின்னு உருட்ட நீ இங்கு காலமில்லாம காரணமில்லாம மூஞ்சி தேச்சிக்கறதும் பவுடர் போட்டுக்கறதும் பொட்டிட்டுக் கறதுமா மினுக்கறது தெரியாதாக்கும்!”

“அதெல்லாம் எங்காசு!” என்று கத்துகிறாள் சொர்ணம்.

“என்னடி எங்காசு... உங்காசு? எனக்குத் தெரியாம எங்காசுன்னு எங்கேருந்து வந்திருக்கும்னு கேட்டேன்! இத்தனை நேரத்துக்கு ஒரு உலையப்போட்டுச் சோத்தை வடிக்கத் துப்பில்ல!”

“இங்கே சாமான் உக்கிராணம் கொள்ளாம தட்டுக் கெடறது, நான் வடிச்சு நிமித்த காலமேலேந்து ஒரு டீத் தண்ணிக்கு வழியில்லாம தலைவலி மண்டையை உடைக்கிறது!”

“சரி, சரி, இப்ப ஒப்பாரி வைக்க வேண்டாம். அந்தச்

சருகைப் போட்டு தாழ்வாரத்து அடுப்பை மூட்டு. இப்ப உலையைப் போடறேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/79&oldid=1101911" இலிருந்து மீள்விக்கப்பட்டது