உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

79

பண்பாடும் உடைந்து சிதைய, அந்தச் சிதிலங்களிடையே எப்படியேனும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற களைகளும் வளருகின்றன. அவர்களுடைய வயலில் உழவோட்ட வரும் மாரி, அவன் மனைவி குழந்தைகளையும், இந்த மதுரத்தின் குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள். காலைப் பனியின் மூட்டத்திலே காட்சிகள் மங்கலாகப் புரிந்தும் புரியாமலும் தோன்றுவது போல் தோன்றுகின்றன.

மாரியின் மகள் மண்ணில் விளையாடுவதிலேயே நிறைவு கண்டு விடும். படியேறி உள்ளே வந்து, எதையும் தொடவேண்டும் என்ற ஆசை அவளை வருத்தியதாகத் தெரியவில்லை.

முகத்தில் ஒரு கை வைத்துக் கொண்டு ஏதேதோ எண்ணங்களிடையே மூழ்கிக் கிடக்கும் அவளை மதுரம் வந்து தொட்டெழுப்புகிறாள்.

“எழுந்திரு, மூஞ்சியெல்லாம் வாடிப் போயிடுத்து, சாம்பாருக்கு அறைக்கிறது பொம்மி. இப்ப சாதத்தை வடிச்சிட்டு, சாம்பாருக்கு வச்சிடுவேன். உப்புமா கிளறி வச்சேன். அத்தைக் கூடத் தின்னல...” என்று பரிவு மேலிடக் கூறுகிறாள் மதுரம்.

“எனக்குப் பசியே இல்ல மாமி...”

“நல்ல குடும்பம் குலம்னு பிறந்ததைத்தான் தெரிஞ்சிண்டு விழாம திரும்பி வந்துட்டியே? இவ்வளவு கண்டிக்கணுமா...?”

“மாமி, மட்றாசில என்னைப்போல அநாதையா இருக்கறவாளுக்கு, ஹோமெல்லாம் இருக்கும்ங்கறாளே, அங்கேபோய் நாஞ்சேந்துட முடியாதா? நான் புத்திக் கெட்டுப் படிப்பையும் விட்டுப் போயிட்டேன்...”

“சே, அழாதே. நீ வந்துட்டியே? அசடுபோல் ஏன் அழறே. இப்ப இப்படித்தான் காலம் கெட்டுக்கிடக்கு. இந்த சொர்ணம் என் தங்கைதான். நான் அவளை வீட்டை விட்டு வெளிவாசலுக்கு ஏன் அனுப்பாம வச்சிருக்கேன்? இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/81&oldid=1101915" இலிருந்து மீள்விக்கப்பட்டது