பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

7

பின் அங்கே போய் மறுபடி உறவு கொண்டாடிக்கொள்ள என்ன இருக்கிறது?

“அவன் எப்ப வருவான் ?”

இந்தக் கேள்வியில் அவளுக்குத் துயரம் துருத்திக் கொண்டு எழும்புகிறது. தலை நிமிராமலே நிலத்தில் கோலமிடுகிறாள்.

“ஏம்மா, என்ன வெட்கம் இப்ப? நடந்தது நடந்தாச்சு. எப்படியோ நீ சந்தோஷமா இருக்கேன்னா சரிதான்.”

தரையில் இரண்டு முத்துக்கள் சிந்திவிடுகின்றன. “ஏம்மா?

“அடாடா எதுக்கு அழறே?”

நன்றாகப் பார்க்க முடியாதபடி, ஆனால் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாதபடி அவ்வளவு அருகாமையில் அவர் வந்து நிற்கிறார். வைகாசி மாசத்து வெயில் திடீரென்று இருள, ஊமைப் புழுக்கமாய் உருக்குகிறது.

“நான் அழலியே ?”

“கோர்ட்டு காரியமா வந்தேன். இப்படீன்னு தஞ்சவூர்ல சுமதி கதை கதையாச் சொன்னாள். நான் மாம்பாக்கம் போகலே. நேரே இங்கேதான் வந்தேன். இப்ப என்ன குடி முழுகிப் போச்சு? என்ன குடி முழுகிப் போச்சுன்னு கேட்டேன். ஏம்மா, நான் கேட்டது சரிதானே ?”

அழுகைதான் அடக்கமுடியாமல் வருகிறது. என்ன சொல்வது?

“எனக்கு இதில் சந்தோஷம்தான். அவ உங்களுக்கெல்லாம் துரோகம் பண்ணிருக்கா. நீயே நினைச்சுப்பாரு? அந்த வீடு உங்கப்பா வெள்ளைக்காரன் கம்பெனியில் இருந்த நாளில் அந்தப்பாணியில் கட்டினது. தோப்பு, வயல், மிஷின் வச்ச துறவுக் கிணறு, எல்லாமா, எங்கக்காக்கு வாழக் குடுத்து வைக்கலே. ஆனால் அவள் வயித்துப் பெண்ணே மத்ததுகளுக்கு வஞ்சகம் பண்ணும்னு நான் நினைக்கலே, சுமதிய முந்தா நாள் கூடத் தஞ்சாவூரில் பாக்கறச்சே நினைச் சிண்டேன். கழுத்து மட்டு சம்சாரம். பிடுங்கல். முக்கிமுக்கி நாத்தம்பது ரூபாய் வராத ஒரு வாத்தியார் வேலை