பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

95

இடுப்புச்சேலையை உலத்துகிறாள் தோட்டத்தில். மைத்ரேயி அவள் சொல்லும் சுற்று வேலைகளைச் செய்கிறாள்; காய் நறுக்கி, தேங்காயரைத்து, காபி கலந்து கொடுத்து, கோகிலம் (தேய்த்து வைத்த பாத்திரங்களை எடுத்து அடுக்கி, வேலை சரியாக இருக்கிறது.

லோகநாயகி மேலிருந்து நன்றாக உடுத்து இறங்கி வருகிறாள். குளிரலமாரியைத் திறந்து மோர் எடுத்துக் குடிக்கிறாள்.

கடுகு மஞ்சள் வண்ணத்தில் பூக்கள் அச்சிட்டு கதர் பட்டு சேலை உடுத்தியிருக்கிறாள். முகத்தில் மூக்கும் கண்களும் தீர்க்கமாக இருந்தாலும் சதை தொங்கி தளர்ந்திருப்பதால் கண்களையும் கருத்தையும் கவரும் சுறுசுறுப்பும் குறுகுறுப்பும் தெரியவில்லை.

“சேதுவுக்குச் சும்மா காப்பி குடுக்காதே மன்னி! என்ன காப்பி குடிக்கிறான்! டாக்டர் நல்ல மோரோ கஞ்சியோ குடுங்கறார்.” | “மோர் கடைஞ்சு குடு!...” என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள். கார் அவளைச் சுமந்து செல்கிறது.

பாலா சாப்பிட வந்து உட்காருகிறாள். சாப்பாடு அறை மேசையில் மைத்ரேயிதான் பரிமாறுகிறாள்.

“அப்பாவுக்கு நீங்களே சாப்பாடு கொண்டு போட்டுடறேளா மாமி” என்று கேட்கிறாள் பாலா.

“அப்பா இங்கே வரதில்லையா?” என்று கேட்பது போல் சட்டென்று வெளியே வந்து பார்க்கிறாள் மதுரம்.

“ரெண்டு நாளா அநுசுயாதான் வந்து சமையல் பண்ண வேண்டியிருந்தது. அப்பா இங்கே வந்தா தினம் ஏதானும் குத்தம் சொல்றார். அம்மாவே அவரை அங்கேயே இருக்கச் சொல்லிட்டா.”

“அப்படியா?”

“ஆமாம் மாமி. இந்த அப்பா ஒரே ‘போர்’! இன்ன விஷயத்தில்தான் தலையிடறதுன்னில்ல. சேதுட்ட போயி “உங்கம்மா ஏன் மூக்குத்தியக் கழட்டிப் போட்டுட்டா”ன்னு கேக்கறார். சீ!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/97&oldid=1101950" இலிருந்து மீள்விக்கப்பட்டது