பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

13

கவனமாகவும், குறைபாடுகளற்றதாகவும் இருந்தது. அத்தையின் மேற்பார்வைக் கவனத்தால் அவரது மனமும் கண்ணாடி போல பளிச்சென்றிருந்தது.

1839-ல், டால்ஸ்டாய் பதினொரு வயது சிறுவனாக இருக்கையில் தந்தை மனைவியை இழந்த சோகம் மேலும் மேலும் நெருக்கவே, மனம் விரக்தியைடைந்து மாஸ்கோ நகரில் காலமானார். அதனால், குடும்பப் பாரம் முழுவதும் அத்தையின் மேலேயே விழுந்தது.

இந்தச் சுமைகளை அவரால் தாங்க முடியவில்லையோ என்னவோ, அண்ணனும் அண்ணியும் சென்ற மரணப் பாதையிலேயே 1840-ம் ஆண்டில் அத்தையும் சென்று விட்டார்!

இப்போது டால்ஸ்டாய் நிலை மிகவும் சோக மயமாக இருந்தது. ஆனால், தூரத்து உறவுடைய ஒருத்தி அக்குடும்பத்தை ஏற்று நிர்வாகம் செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்த உறவுக்காரியிடம் எல்லாவித பலவீனங்களும் குடி கொண்டிருந்தன. குடி போதை ஒருபுறம் ஆடல் பாடல் இரவு பகலாக இன்ப நுகர்ச்சிகளின் விருந்துக் கேலிக் கூத்துகள் இன்னோர் புறம் தன்னைச் சேர்ந்த ஆண் பெண் நட்புகளுக்கு அன்றாடம் நடத்தும் விருந்துகள் வேறோர் புறம் இவ்வாறு, நாலா புறங்களிலும் டால்ஸ்டாயின் தந்தை சேர்த்து வைத்த குடும்பச் சொத்துகள் காலியானது, அவளின் கீழ் வளர்ந்த டால்ஸ்டாயினுடைய, உடன்பிறப்புகளது மனத்தில் ஏதோ சில நெருஞ்சி முட்கள் நெருடலாயின.

இருந்தாலும், நிகோலஸ், இளவரசி மேரி என்ற டால்ஸ்டாயின் பெற்றோர்களது. வளர்ப்பு மிகச் சிறப்பாகவும் பொறுப்பாகவும், இருந்ததால், டால்ஸ்டாயும் அண்ணன்மார்களும் நற்குணம் பெற்றவர்களாகவே வளர்ந்து வந்தார்கள்.