பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

லியோ டால்ஸ்டாயின்

சாகக்கூடாது? என்பதே டால்ஸ்டாயின் இளமைக் காலக் கேள்வி! இந்த எண்ணம் புகைவிட்டு, சுடர்விட்டு, சோதியாக எரிந்தது. தூக்கி எறிந்தார் பள்ளி நூல்களை;

நகர்ந்தது காலச் சக்கரப் பற்கள். படிப்படியாக டால்ஸ்டாயும் மனம் மாறிவிட்டார். அதன் எதிரொலி என்ன தெரியுமா? கத்தோலிக்க கிறித்தவ மதப்பிரிவைச் சேர்ந்த அவருக்கு சமயப்பற்று அதிகமானது. கிறித்துவத் தேவாலயத்துக்கு அடிக்கடி சென்று பாதிரிமார்களின் அருட் ஜெபங்களைக் கூர்ந்து கேட்பார்!

கேட்பதோடு மட்டும் அவர் நில்லாமல், மதகுருக்கள் என்ன கூறுகிறார்களோ அதைப் பின்பற்றுவார். இயேசு பெருமானிடம் அவருக்கு அளவு கடந்த பற்றுண்டு.

தேவாலயம் சென்ற நேரம்போக, மிகுதியான வேளைகளில், அவர் உடல் பயிற்சி, வீர விளையாட்டுக்கள் ஆகியவற்றில் கலந்து உடல்வளம் சீரடைய தேகப் பயிற்சிகளையும் செய்வார்.

அக்கால ருஷ்யாவில், ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமைப் பிரிவுகள் அதிகமாக இருந்தன. ஏழைப் பிள்ளைகளோடு சீமான் வீட்டுப் பிள்ளைகளையோ, நடுத்தர வர்க்கப் பிள்ளைகளோடு நிலச்சுவான்தாரர்கள் அல்லது பெரும் பிரபுக்கள் பிள்ளைகளையோ, பணக்காரக் குழந்தைகளோடு வறுமைபடைத்த சிறுவர்களையோ படிப்பதற்கும் கூட விடமாட்டார்கள்; கூடிப்பழகிட மனம் விரும்ப மாட்டார்கள். அதனால், இளம் வயது டால்ஸ்டாய் தேகப் பயிற்சிகளை அவர்களோடு சேர்ந்து செய்யமாட்டார்; ஆனால், தனியாக ஜிம்னாசியம் செய்வார். அதனால் அவர் நெடுநாள் வாழும் உடல் வளமும் வனப்பும் பெற்றார்.