பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

33

அப்போது இருந்த ரஷ்ய மாமன்னரும், டால்ஸ்டாய் சிறுகதைகளை உணர்ச்சியூன்றிப் படித்து மிகப்பேரானந்தம் கொண்டார். யார் அந்த எழுத்தாளர் எந்தப் போர்ப் படைப் பிரிவிலே அந்த மேதை பணியாற்றுகின்றார்? அபாயகரமான போர் முனைகளுக்கு எல்லாம் அவரை அனுப்பவேண்டாம். என்று அந்த சக்கரவர்த்தி தனது அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

செபாஸ்டபூல் போர் அனுபவங்களைக் குறித்து அறிக்கை ஒன்று தயாரித்து அனுப்புமாறு மன்னன் கட்டளையிட்டுள்ளதாக அதிகாரிகள் டால்ஸ்டாயிடம் தெரிவித்ததை முன்னிட்டு அவர், அரசர் உத்தரவுக்கு ஏற்றவாறு அறிக்கையைத் தயாரித்துக் கொண்டு ருஷ்ய மாமன்னனை நேரில் பார்க்க, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குப் புறப்பட்டார்.

சக்கரவர்த்தியைக் காணவந்த டால்ஸ்டாயை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் வரவேற்றார்கள். மன்னர் சார்பில் மாபெரும் பாராட்டுக் கூட்டம் நடந்ததால், அக்காலத்தில் ருஷ்யாவில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்த டர்கெனிவ் என்பவரும் கலந்து கொண்டு டால்ஸ்டாய் எழுத்துக்களைப் பாராட்டினார். அந்தக் கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

அவரது சிறுகதைகளது உணர்ச்சி வார்ப்படங்களாகக் கொலுவீற்றிருந்த நிலவுடைமையாளர்கள், குடியான விவசாயிகள், பணக்காரப் பிரபுகள், ஏழைகள், எல்லாவற்றுக்கும் மேலான வாசகர்கள் எல்லாருமே கூடி அவரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

ருஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், அவரவர் இல்லங்களுக்கு லியோ டால்ஸ்டாயை அழைத்துச் சென்று விருந்தளித்தார்கள். இவையனைத்தையும் டால்ஸ்டாய்