பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

லியோ டால்ஸ்டாயின்

ருஷ்ய நாட்டுக் கல்விமுறை டால்ஸ்டாய்க்குப் பிடிக்கவில்லை. அதனால், ஜெர்மன் போன்ற நாடுகளில் உள்ள கல்வி முறையைக் கண்டறிய அவர் நேரில் சென்றார். அங்கே அவர் அறிந்தவரை அங்குள்ள கல்வி முறைகள் அவருக்குத் திருப்தி தருவனவாக இல்லை. மாணவர்கள் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பழக்கம் அங்கே இருந்தது. இந்த முறையின் போக்கும் நோக்கும் பற்றி ஜெர்மன் அறிஞர்களிடம் விவாதித்துக் கருத்தறிந்தார் டால்ஸ்டாய்.

கடைசியாக அவர் சோடேனுக்கு வந்து சேர்ந்தார். அண்ணன் நிக்கோலஸ் மரணத்துடன் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அவருடன் பிரெஞ்சுக் கடற்கரையிலே உள்ள ராய் வீல் என்ற இடத்துக்குச் சென்று டால்ஸ்டாய் தங்கியிருந்தபோது அங்க நிக்கோலஸ் காசநோய் முற்றிக் காலமானார்.

அண்ணனின் அருமை பெருமைகளையும் அவர் தன் மீது காட்டிய அக்கறையினையும். அன்பினையும் எண்ணி எண்ணி டால்ஸ்டாய் கண்ணீர் சிந்தினார். தமையனாரின் தாளாத்துயரம் அவரை மேலும் வேதனைப்படுத்தி கவலையுற வைத்தது. அந்தத் துன்பத்தை தனது நண்பருக்கு அவர் தெரியவித்தபோது எழுதிய கடிதம் வருமாறு:

“மரணம் போல் தீயது உலகத்தில் வேறொன்றும் இல்லை!” என்று என் அண்ணா நிக்கோலஸ் அடிக்கடி கூறுவார். எவ்வளவு தூரம் அந்தக் கணிப்பு சரியானது என்று இப்போது நான் அதைப் புரிந்து கொண்டேன். சாவு ஒன்றால் தான் இந்த வாழ்க்கை முடிகிறது என்றால், இந்த வாழ்க்கை முழுவதும் நாம் வாழ்ந்தது வெறும் விழலுக்கு இறைத்த நீரல்லவா?

சாவு காரணமாக நிக்கோலசுக்கு உலகத்தில் எதுவுமே மிஞ்சவில்லை என்றால், இந்த உலகத்திலே உள்ள பொருள்களைப் பெற்றிட அவர் நடத்திய வாழ்க்கைப் போராட்டமே வீணல்லவா? ஆனால், மரணம் எனது அண்ணனது கழுத்தைக்