பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

லியோ டால்ஸ்டாயின்

சாவு என்ற அவரது சோக வடிவ உணர்ச்சி டால்ஸ்டாயின் மன நிலையை முழுவதுமாகச் சீர்குலைத்துவிட வில்லை. எனவே, ஜெர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளிலே உள்ள கல்வி முறைகளை முற்றிலுமாக அலசி ஆய்ந்து, ருஷ்ய நாட்டின் கல்வி முறையையும் ஆராய்ந்தார்; தொடர்ந்து அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வை நடத்தியாக வேண்டும் என்பதற்காகவே, டால்ஸ்டாய் முன்கூட்டியே வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது தமையனார் இறந்த பிறகு கிடைத்த ஓய்வின் போது, ருஷ்யக் கல்வி முறையில் சோதனையை நடத்திடலானார்.

சோவியத் ருஷிய நாட்டில், குடியானவர்கள் அடிமைகளை விடக் கேவலமாக, கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட காலம் அது. நிலம் விற்கப்படும் போது, அதை யார் உழுது விவசாயம் செய்தானோ அவனையும் சேர்த்து அநியாயமாக விற்றுவிடுவார்கள். நிலச்சுவானின் அடிமைகள் என்று அவர்களுக்குப் பெயர்.

இந்த அடிமைப் பழக்கத்தை, கொத்தடிமை ஏகபோகத் தன்மைகளை எதிர்த்து ருஷ்ய நாட்டின் சில பகுதிகளில் பல முறைகள் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடந்தன என்ன பயன் அவற்றால்?

ருஷிய மன்னர் இதையெல்லாம் கேட்டும், பார்த்தும், செவிகேளாராய், விழி பாராராய் இருந்து வந்தார். அதிகார வர்க்கம் இதனால், இந்த அடிமை முறைப் பழக்கத்தால் நன்மை அடைந்தது. அதனால்தான், அதிகார வர்க்கம் நிலச்சுவான் அடிமைகள் கிளர்ச்சிகளைக் கடுமையான முறையில் அடக்கியாண்டது!

1857-ஆம் ஆண்டு ஜார் நிக்கோலஸ் மறைந்து விட்ட பிறகு, அலெக்சாண்டர் என்பவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். அவர் இயற்கையாகவே நற்குணமும் வாய்ந்தவர். இப்படிப்பட்ட ஒரு பண்பாளரிடம், மனித உரிமைகளால் நலம் பெறலாம் என்று