பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

49

கொள்வதும், எரிந்து விழுந்து ஏசுவதும் பேசுவதும், அடிப்பதுமாக இருந்து வருவான். அதனால் இருவரிடையே பகை இருந்து கொண்டே வந்தது.

ஏதோ ஓர் அற்பவிஷயத்துக்காக ஒரு நாள் அதிகாரிக்கும் சிபனினுக்கும் தகராறு மூண்டுவிட்டது. எல்லாவீரர்களின் முன்னிலையிலேயே அதிகாரி அவனை அடித்துவிட்டான் பொறுமை இழந்து, மற்ற வீரர்கள் முன்பு அடிபட்டதை எண்ணி ஆத்திரமடைந்து விட்ட சிபனின், அதிகாரியைத் திருப்பி அடித்துவிட்டான்.

பிறகு என்ன? எரியும் நெருப்புக்கு எண்ணெயை ஊற்றிவிட்ட வீரனின் நிலை எவ்வாறு இருக்கும்? ராணுவ நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விட்டான் அதிகாரி. அந்த வீரனுக்கு யாரும் உதவிபுரிய முன் வரவில்லை. இந்தச் செய்தி அருகிலே உள்ள கிராமத்திலே வாழ்ந்து கொண்டிருந்த டால்ஸ்டாயின் கவனத்துக்கு வந்துவிட்டது. டால்ஸ்டாய் ராணுவத்திலே அதிகாரியாகப் பணியாற்றியவர் அல்லவா? அதனால் அதிகாரிகள் போக்கும், ராணுவ நீதி மன்றத்தின் செயலும் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர் தானே அவர்?

அதனால் வீரன் சிபனினுக்காக ராணுவ நீதிமன்றத்தில் வாதாட முன்வந்தார் டால்ஸ்டாய். ஆனால், ராணுவம் சார்பாக வாதாடவோ, தலையிடவோ கூடாது என்று நீதிமன்றம் அவரைத் தடுத்துவிட்டது.

இருந்தாலும், டால்ஸ்டாய் பேசும் போது, வீரன் செய்தது சாதாரணத் தவறு. அதிகாரியின் கொடுமையைத் தாங்க முடியாமல் இந்த வீரன் அதிகாரியைத் திருப்பி அடித்து விட்டான். எனவே, அவரை மன்னிக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.