பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

லியோ டால்ஸ்டாயின்

இராணுவ நீதிமன்றம் அவர் பேச்சைக் கேட்க மறுத்து விட்டது. அதிகாரியை அடித்தவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தீர்ப்பளித்தது. எவ்வளவோ முயன்றும் அவனைக் காப்பாற்றிட டால்ஸ்டாயினால் முடியவில்லை. சிப்சனும் சுடப்பட்டு மாண்டான்!

இந்த நிகழ்ச்சி மனித நேயத்தில் தோய்ந்து ஊறிக்கிடந்த டால்ஸ்டாயிக்கு கவலையளித்தது. அதனால் மனச் சோர்வடைந்தார். வீரன் சிப்சன் சுடப்பட்ட சம்பவம் கிறித்துவ மதத்துக்கே அவமானம், இழுக்கு என்று கூறிவிட்டு வீடு சென்றார்.

டால்ஸ்டாய் தம்பதிகளுக்கு 1863 - ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. நாளாக நாளாக அவருக்குப் பல குழந்தைகள் பிறந்தன.

பெற்றக் குழந்தைகளை வளர்ப்பதிலே தாயும், கல்வி கற்பிப்பதிலே தந்தையும் அக்கறை கொண்டார்கள். அதனால், தனது எழுத்துப் பணிக்கு இடையூறு இருப்பதை எண்ணி, குழந்தைகளைப் பாதுகாத்துப் பேணிட ஆங்கிலேயத் தாதிகளையும், ஜெர்மானியப் பணிப்பெண்களையும் வேலைக்கு அமர்த்தினார். ஓய்வு நேரத்திலே குழந்தைகளுக்குரிய கல்வியைக் கற்பிப்பார்.

டால்ஸ்டாய், தான் முன்பு துவங்கிய பள்ளியில் கல்விச் சோதனைகளை எவ்வாறு திட்டமிட்டு அமல்படுத்தி மக்கள் இடையே நல்ல பெயரையும் புகழையும் பெற்றாரோ, அது போலவே தனது குழந்தைகளை அடிக்காமலும், அதட்டமாலும், திட்டாமலும் அவர் வளர்த்தார். அது போலவே, பிறரும் தனது குழந்தைகளை மிரட்டாமலும், ஏசாமலும், அடிக்காமலும் பார்த்துக் கொண்டார். அவரது பிள்ளைகள் ஏதாவது தவறுகளைச் செய்வதால் அவற்றை அவர் அலட்சியம் செய்து விடுவார்; பொருட்படுத்த மாட்டார்; மீண்டும்