பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

லியோ டால்ஸ்டாயின்

களாக அரும்பாடுபட்டு, தனது அனுபவச் சிந்தனைகளை எல்லாம் தொகுத்து, நூலறிவுகளின் உதவிகளோடு, உலகம் போற்றும் இரண்டு மாபெரும் நாவல்களை ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதி வெளியிட்டார்.

“போரும் அமைதியும்”, ‘ஆன்னா கரீனனா’ என்ற நாவல்களே அவை. இந்த இரு பெரும் நாவல்கள், டால்ஸ்டாயின் பெயரைப் புகழேணியில் ஏறவைத்து எழுத்துலகச் சிகரத்தில் நிறுத்தி அழகு பார்த்தன என்றால் மிகையல்ல.

உலகத்தின் எல்லா நாடுகளும் அந்த நூல்கள் இரண்டையும் படித்து டால்ஸ்டாயைப் பாராட்டி மகிழ்ந்தன. அந்த நாவல்களைப் படிக்காத வாசகர்கள் எந்த நாட்டிலும் இருக்க முடியாது என்ற நிலையை அந்த நாவல்கள் நிலைநாட்டி விட்டன. அவரது புகழை மென்மேலும் அவை பெருக்கிவிட்டன.

டால்ஸ்டாய் உலகப் பெரும் எழுத்தாளர்களின் வரிசையில் தலையாயவர் என்று பிற நாட்டுப் பேரறிஞர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள். இவ்வாறு அவரது நூல்களைப் படித்த மேதைகளிலே ஒருவர்தான் நமது இந்திய விடுதலைத் தந்தையான மகாத்மா காந்தியடிகள்! அதனால் தான் காந்தியண்ணல் தென்னாப்ரிக்காவிலே வழக்கறிஞராகப் பணியாற்றச் சென்றிருந்தபோது, அங்கே டால்ஸ்டாய் சிற்றுண்டி விடுதியைக் கூட்டுறவு முறையிலே நடத்திக் காட்டினார்.

டால்ஸ்டாய் எவ்வாறு ஒவ்வொரு வேலையிலும் தனது கவனத்தைச் செலுத்தி ஆழ்ந்து ஊக்கத்துடன் பணியாற்றினாரோ, எல்லா வேலைகளிலும் தனது முத்திரை முயற்சி இருக்க வேண்டும் என்று ஓய்வு ஒழிச்சலின்றிக் கடுமையாகவே உழைத்தாரோ, எந்தப் பணியும் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணிச் செய்து காட்டினாரோ, கல்வித் துறையில் ஒரு புதிய தத்துவத்தையே வளர்த்தாரோ, ஆசிரம