பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஜார் மன்னன் படுகொலையும் டால்ஸ்டாய் வேண்டுகோளும்!

லக்கிய வளம் செறிந்த நூல்களான ‘போரும்-அமைதியும்’, ‘ஆன்னாகரீனா’, ‘க்ரூசர் சோனடா’ மற்றும் எண்ணற்ற சிறுகதைகளின் லட்சக்கணக்கான பிரதிகளின் விற்பனையாலும், டால்ஸ்டாய் விவசாயப் பண்ணையின் வருவாயாலும் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, சமாரா என்ற நகர் அருகே சொத்துக் கொஞ்சம் வாங்கினார்.

1873- ஆம் ஆண்டுவரை அவர் சமாரா நகரிலேயே தங்கி அதன் பிற பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். வெகு சீக்கிரத்தில் அப்பகுதியில் பஞ்சம் வருமென்றும், உடனடியாக ஜார் மன்னனின் அரசு பஞ்சம் போக்க அல்லது பஞ்சம் வராமல் தடுக்க ஏதேனும் பெரிய முயற்சியை மேற்கொள்ளாவிட்டால், அங்கு வாழும் மக்கள் பலமான சேதமடைவார்கள். அவர்களது உயிருக்கும் - உடைமைக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அறிந்தார்! அதனால், தான்கண்ட உண்மை நிலைகளை விளக்கி அரசாங்கத்துக்கு அறிக்கை மூலம் அறிவித்தார்.

ஆனால், ஜார் மன்னனான அலெக்சாண்டர், டால்ஸ்டாய் அறிக்கைக்கு உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தான். இதுபற்றி ஒன்றும் அறிந்து கொள்ளவாவது முயற்சிக்கவில்லை.