பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

லியோ டால்ஸ்டாயின்

ஆத்திரமடைந்த மக்கள் புரட்சிக் கொடியை ஏந்த ஆரம்பித்து விட்டார்கள். இந்த நெருக்கடிகள் நாளுக்கு நாள் நெருப்புபோல சுடர்விட்டு எரிந்தனவே தவிர, அவர்கள் கோபம் தணியவில்லை. இவற்றின் எதிரொலியாக ஜார் மன்னன் அலெக்சாண்டரை மக்கள் படுகொலை செய்து விட்டார்கள். இந்தப் புரட்சி 1881 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் நாள் நடந்தது. ருஷ்ய நாடெங்கிலும் கலகமும், கலவரங்களும் பெரிய குழப்பங்களும் நடந்து கொண்டே இருந்தன!

மன்னன் படுகொலைக்கு அல்லது படுகொலைக் குழப்பங்களுக்கு யார் யார் காரணமோ இல்லையோ, அவர்களை எல்லாம் கைது செய்தார்கள்! காராக்கிரகத்தில் அடைத்தார்கள் ஒரு பாவமும் இல்லாத பலரைத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்! துடிதுடிக்கக் கில்லெட்டின் கொலைக் கருவியிடையே தலைகளை வைத்து வெட்டித் தலைவேறு முண்டம் வேறாகத்துள்ள வைத்த்தார்கள், பாவம்!

இவற்றையெல்லாம் டால்ஸ்டாய் கண்டார்! ஒரு முறையா அல்லது பல முறையா அவர் இவ்வாறு ரத்தாபிஷேகப் படுகளங்களைக் காண்பது? என்றாலும், ஏன் இந்த அவல நிலை? எதற்காக இந்த ஆட்சி இப்படி மக்கள் உயிர்களை வேட்டையாடுகின்றது? இது என்ன நாடா? இல்லை காடா? என்ற கேள்விகளுக்கு இடையே அவர் தவித்தார்.

புதிதாக அரச பீடம் ஏறிய ஜார் மன்னன் மூன்றாம் அலெக்சாண்டரிடம், சதிகாரர்களை மன்னிக்குமாறு வேண்டினார் டால்ஸ்டாய். இயேசு பெருமான் அருள் மொழிக்கு ஏற்றவாறு அவர்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு அரசன் செய்தால், மக்களுக்கு மன்னன் மீது மதிப்பும் மரியாதை போன்ற நல்லெண்ணமும் ஏற்பட ஒரு புதிய வழி உருவாகும்