பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

லியோ டால்ஸ்டாயின்

மேற்கண்டவாறு மாஸ்கோ மக்கள் சுகபோக போதையிலே புரள்வதைக் கண்ட டால்ஸ்டாய் துயரத்தோடும் வேதனையோடும் மனம் வெதும்பித் தனது உள்ளக் கிளர்ச்சியை ஓர் அஞ்சல் மூலம் நண்பர் ஒருவருக்கு கண்ணீர்க் கடிதம் என்ற பெயரிலே எழுதியனுப்பினார். அதன் விவரம் இதோ:

“நண்பரே! எனது வீட்டுக்கு நான் திரும்பிய போது ஏதோ ஒரு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு வந்தவன் போலத் தோன்றியது.

‘மிதி விரிப்புகளால் மூடுண்டுகிடக்கும் படிக்கட்டு களைக் கடந்து விலையுயர்ந்த ரத்தினக் கம்பளங்கள் விரித்த அறைக்குள் துழைந்தேன். நான் அணிந்திருந்த விலை உயர்ந்த கோட்டைக் கழற்றினேன். உணவுண்ண உட்கார்ந்தேன்.

என் முன்னே வித விதமான இன்சுவைப் பண்டங்கள் பரிமாறப் பட்டிருந்தன. என்னெதிரே - அழகான சீருடை அணிந்த பணியாளர் இருவர் நின்று கொண்டு எனக்குப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும், நான் பாரிஸ் மாநகரத்திலே பார்த்த ஒரு மரண தண்டனைக் காட்சிதான் என் கண்கள் முன்பு பளிச்சென தெரிந்தது.

ஆயிரக் கணக்கான மக்கள் கூடியுள்ள ஓரிடத்தில் ஒரு மனிதனின் தலை கில்லட்டின் கொடுவாளால் வெட்டப்பட்டுத்துண்டாக எகிறி வந்து ரத்தம் பீறிடப் பீறிட ஒரு குப்பைக் கூடையிலே விழுந்ததை முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலே பார்த்தேன்.

தலை வெட்டப் பட்டவன் பெரிய குற்றவாளி என்று எனக்குத் தெரியும். இந்தக் கொடுமையான தண்டனையை விதிப்பதற்காகக் கூறப்படும் காரணங்களையும் நான்