பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

லியோ டால்ஸ்டாயின்

டால்ஸ்டாய் தனது கூப்பாட்டை நிறுத்திய, பின் அவருடைய சிந்தனையிலே ஒரு தெளிவு பிறந்தது. இந்த சமூகத்தைத் தலை கீழாகப் புரட்டினால் ஒழிய எந்த வித நன்மையும் நாட்டுக்கு ஏற்படாது என்கிற முடிவுக்குத்தான் அந்த சமுதாய ஞானியால் வரமுடிந்தது.

ஏழைகளின் அன்றாடப் பிரச்னைகள், அவர்களுக்கு உணவும் உடையும் தருவதால் மட்டும் தீர்ந்து விடாது. அவர்களுடைய தேவைகள் பல என்பதை அவர் நெஞ்சார உணர்ந்தார்.

ருஷ்ய சமுதாயத்தில் மக்கள் எந்தெந்த வகையில் வாழ்க்கையோடு போராடுகிறார்கள் என்பதை அன்றைய பொருளாதார ரீதியாகச் சிந்தித்தார் டால்ஸ்டாய். அதனால் வாழ்க்கையில் துன்பப் படுவோரை மூன்று பிரிவாகப் பிரித்தார். அந்த மூவர் யார் தெரியுமா?

1. வேலை கிடைக்காததால் வேலை செய்யாதவர்கள். 2. வறுமையால் வாழ முடியாமல் பரத்தைத் தொழிலில் புகுந்துவிட்ட விலைமகளிர் 3. குழந்தைகள்.

மேற்கண்ட மூன்று வகையினரின் வாழ்க்கையிலே ஒளி வீசிட மூன்று வழிகளையும் டால்ஸ்டாய் கூறினார். என்ன அவை:

முதல் வகையினருக்கு எந்த வித தான தருதமும் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள், வேலை இல்லாமையால் வேலை செய்யாதவர்கள். அப்படியானால், வேலை கொடுத்தால் வேலை செய்வார்கள்! செய்தால் அவர்களது வறுமை அழியும் இல்லையா? எனவே, அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் அது அரசின் கடமையாகின்றது.

இரண்டாம் வகையினருக்கு, அதாவது வறுமையால் விலை மகளாகி உடலை விற்பவர்கள். அத்தகைய பெண்களை ஒழுக்கத்தோடு வாழக் கல்விகற்பிக்க வேண்டும். கற்றக்