பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

லியோ டால்ஸ்டாயின்

துன்பங்களை அகற்றவும், அவர்களோடு சேர்ந்து வேலை செய்யவும் முன்வாருங்கள்’ என்று அவர் இன்ப வாழ்க்கையில் ஆழ்ந்த தோய்ந்து கலந்து, மிதந்து தத்தளித்துத் தவிப்போரைப் பார்த்துத் தியான வாழ்க்கைக்கு வாருங்கள் என்று டால்ஸ்டாய் வேண்டி அழைக்கின்றார் அல்லது தூண்டி விடுகின்றார் என்று கூறலாம்.

ஞான வித்தகர் டால்ஸ்டாய் தான் எழுதிய கட்டுரைகள், கதைகள், சிறுகதைகள், குறு நாவல்கள், பெரும் நாவல்கள், நாடகங்கள் ஆகியவற்றின் மூலம் உபதேசம் செய்வேதோடு மட்டும் நின்று விடவில்லை. என்ன செய்தால் நாட்டுக்கும். சமுதாயத்துக்கும். மக்களுக்கும் நல்லது என்று கூறுகிறாரோ, அப்படியே அவர் எவ்வளவு துன்பங்கள், அரசு தொல்லைகள் வந்தாலும் அவற்றை ஏற்று முன்மாதிரி வாழ்க்கை வாழ்ந்து காட்டிய ஞானி அவர்.

‘ஊருக்குத்தான் உபதேசம், உனக்கு இல்லையடி கண்ணே’ என்ற அரசியல்வாதியின் தன்மை அவரிடம் இருந்ததில்லை. காரணம்; அவர் இலக்கியவாதி; சிந்தனாவாதி; திருத்தவாதி; லட்சியவாதி எனவே, அவரால் சொல்வதற்கு ஏற்றபடி வாழ்ந்து காட்ட முடிந்தது என்பது மட்டுமல்ல; அவர் ஒரு அறம் சார்ந்த ஞானியும் ஆவார்.

அவர் உலகப் புகழ்பெற்ற போதும் கூட, அவருடைய தினசரிக் கடமைகளை ஒழுங்கு படுத்திப் பட்டியலிட்டுக் கொண்டு செய்து வந்தார். தன்னுடைய சிறு வயதுப் பழக்கமான நாட்குறிப்பு எழுதுவதையும் மறக்காமல் கடைப்பிடித்து வநதார்.

அதிகாலையில் எழுவார்; எழுதுவார் படிப்பார்; எதைப் பற்றியும் பொறுமையாக, பொறுப்பாகச் சிந்திப்பார். பிறகு, தனது உடலுக்கு ஆரோக்கியம் தருவதற்கான உடலுழைப்புகள் எதுவோ, அது கடினமாக இருந்தாலும் சரி வியர்வை சொட்டச்