பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

65

லாம் உதவிட நினைக்கின்றாரோ, அப்போதெல்லாம் அவர் எவ்வளவு பெரிய துன்பங்களை, ஆபத்துக்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதற்காக அஞ்சாது, துணிந்து செய்வார். செய்தபிறகு எப்படிப்பட்ட ஆபத்துக்கள் வந்தாலும் மகிழ்ச்சியோடு அதைக் கடமையாக ஏற்றுக் கொள்ளும் பண்பாளர் டால்ஸ்டாய்.

வண்டியில் ஒரு முறை வைக்கோலை ஏற்றும் போது, அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது. பிறகு வலி குறைந்தது. டால்ஸ்டாய் காயம் ஆறியதால் தான் வலி நீங்கியது. என்று எண்ணி அலட்சியமாக இருந்துவிட்டார். நாளாகநாளாக, காயம் பட்ட அதே இடத்தில் மீண்டும் வலியும் வீக்கமும் உண்டானது. படுத்த படுக்கையானார்; பிறகு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் நிலையேற்பட்டது அவருக்கு!

அறுவைச்சிகிச்சை முடிந்த பின்பு, காயமும் வலியும் சிறுகச் சிறுகக் குறைந்து சுகமானது. படுக்கையாக இருந்தபடியே டால்ஸ்டாய் ஒரு நாடகத்தை எழுதி முடித்தார். அந்த நாடகம் தான் ருஷ்ய மக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட “இருளில் ஒளி” என்ற நாடகமாகும்.

சிகிச்சை முடிந்து எழுந்த லியோ டால்ஸ்டாய் மீண்டும் அயராது எழுத ஆரம்பித்தார். அன்று வரை அவர் எழுதிய எழுத்துத் தொகுப்புகளை எல்லாம் மாஸ்கோ பதிப்பக நிறுவனத்துக்குக் கொடுத்தார். போரும் அமைதியும் நாவலை சிறப்புப் பதிப்பாக வெளியிட்டு, அமெரிக்கா முகவர்களுக்கு அனுப்பியதும், டால்ஸ்டாய் பிரதிகள் முன்பைவிட அதிகமாக இப்போது விற்பனையாயிற்று.

--