பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

லியோ டால்ஸ்டாயின்

கோபமலையின் மேலே ஏறி ஜார் கொக்கரித்தான் என்னை மதியாத உங்களை மக்களோடு மக்களாக இணைந்து வாழ விடமாட்டேன்! காக்கசஸ் மலைமேலே உள்ள காட்டு மிராண்டிகளோடு மிருகங்களைப் போல போய் வாழுங்கள் என்று கொடுமையான சீற்றத்தோடு சீறி ஆணையிட்டான்!

அந்தப் பழம்பெரும் இனம் ஜார் உத்தரவுப்படி காக்கசஸ் சென்று; அங்கே மிருகங்களைப் போல வாழ்ந்த காட்டுவாசிகளோடு அன்பாகப் பழகி அவர்களது வாழ்க்கையின் இன்பதுன்பங்களில் இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்தார்கள்.

தங்களது ஆதி இனக் கொள்கைக்கு விரோதமாக, ஜார் மன்னன் ராணுவத்தில் சேர ஆணையிட்ட போது, “நாங்கள் வாளேந்த மாட்டோம், போராளிகள் அல்ல; அமைதியை வளர்ப்போர் என்று கூறிய தங்கள் கொள்கைக்கு மாறாக, நாளடைவில் அவ்வப்போது ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்தார்கள்.

இதைக் கேள்வியுற்ற மன்னன் ஜார், மறுபடியும் அந்த இனத்தை இராணுவப் படைகளில் சேர்க்க விரும்பினார். ஆனால், 1895-ஆம் ஆண்டின் போது, அந்த இனம் தங்களது தவறுகளை உணர்ந்து, அவர்களிடம் இருந்த எல்லா வகை ஆயுதங்களையும் ஓரிடத்தில் திரட்டிக் குவித்து, தீ வைத்து எரித்தார்கள்.

இதனைக் கண்ட கொடுங்கோலன் ஜார் கோபாவேசம் கொண்டு ஆண்டவனோடு போராடுவோர் என்ற அந்த இன மக்களைத் துன்புறுத்தினான். அவர்களை மனம் போனவாறு போலீசை ஏவி சித்ரவதை செய்தான்!

அந்தப் பழங்குடி இன மக்களின் தொடர் சோகக் கதையை அறிந்த மனிதநேய மகானான டால்ஸ்டாய், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், சோதனைகளையும்,