பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

லியோ டால்ஸ்டாயின்

பெருமக்கள் அனைவரும் இந்த விழாக்களிலே கலந்து பாராட்டினார்கள்.

டால்ஸ்டாய்க்கு எண்பது வயதாகிவிட்டது. ஆனாால், ஜார் மன்னன் ஆட்சிக்கு மக்கள் இடையே எதிர்ப்பு முதிர்ந்து வலுப்பெற்ற வந்ததனை அந்த விழா உணர்த்திற்று. ஏனென்றால், பல நூற்றாண்டுகளாக நடந்து வந்த ஜார் மன்னன் பரம்பரையினுடைய கொடுங்கோல் ஆட்சி இந்த விழாவிலும் பல முட்டுக்கட்டைகளை போட்டது. இந்த அநீதியான ஆட்சியின் அவலச் செயல்களைப் பார்த்து டால்ஸ்டாய் துன்புற்றார்.

பொது மக்களை ஜார் ஆட்சி திடீர் திடீரென்று கைது செய்து சிறையிலே அடைத்தது. மக்கள் சிலரைத் தூக்கு மேடைகளுக்கும் அனுப்பியது; சைபீரியக் குளிர் காடுகளுக்கு மக்களை நாடு கடத்தியது. இந்த அக்கிரமக் கொடுமைகள் ஜார் ஆட்சியில் வழக்கமாக நடைபெறும் சம்பவங்கள்தான். அந்த அநீதிச் செயல்கள் ஒரு மூதறிஞரது விழாக்களிலும் கூடவா நடத்தப்பட வேண்டும் என்ற கேள்விகளை கல்விமான்கள் அறிக்கைகள் மூலமாகக் கேட்டு எதிர்ப்புக்களை எழுப்பினார்கள். அதனால் டால்ஸ்டாயிக்கும் மனம் பொறுக்க முடியவில்லை.

ஐரோப்பிய நாடுகளிலே இருந்து வெளியான புகழ் பெற்ற பெரிய பத்திரிகைகள் எல்லாம் இந்தக் கண்டனங்களை எழுப்பின. டால்ஸ்டாயும் ஜார் ஆட்சியின் கொடுமைகளை, விழா நேரத்திலே விழாவின் பெயரால் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவதா என்று கடிதங்கள் மூலமாகக் கண்டித்தார். இதனால், ஐரோப்பிய நாடுகளிலே ஜார் ஆட்சிக்கும் துர்நடத்தைகளுக்கும் மேலும் இகழ்வுகளே