பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டால்ஸ்டாயின் கடைசி நூல்

னித நேய மகான் லியோ டால்ஸ்டாய், தனது எழுத்துப் பணிகளால், இலக்கியச் சேவைகளால் ருஷ்ய நாட்டில் மட்டுமன்று; உலகம் முழுவதுமே புகழ்பெற்றிருந்தார். பெற்ற பெருமைக்கு ஏற்றவாறு அவருக்கு வேறு பல சமுதாயத் தொண்டுகளும், நாட்டுப் பணிகளும் அதிகரித்து வந்தன.

இதற்கிடையில் உலகம் முழுவதுமுள்ள பேரறிஞர்கள், கல்விமான்கள், சமுதாய நற்பணியாளர்களும் நாள் தோறும் அவரைச் சந்தித்து ஆறுதலும், தேறுதலும், வாழ்த்துக்களும் நேரில் கூறினார்கள். வர இயலாத அவருடைய வாசகர் பெருமக்கள், கடிதங்களை எழுதிக் குவித்து அவரை உற்சாகப்படுத்தினார்கள். ஆனாலும், அவரது வயோதிகம் அவரைத் தளர வைத்த படியே நகர்ந்தது.

இத்தகைய வயோதிகப் பருவத்திலும், டால்ஸ்டாய் தனது இலக்கியப் பணியைக் கைவிடவில்லை. அவருடைய ஆன்மிக வலிமையும், இலக்கியப் பற்றின் வேகமும் அதிகரித்த படியே இருந்தது. இதன் காரணமாக, அவர் தனது இறுதி நூலான, “எ சைக்கின் இன் ரிடிங்” என்ற புத்தகத்தைப் பல தொல்லைகளுக்கு இடையே எழுதி முடித்தார்.

“இந்தப் புத்தகத்தில், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு என்ன காரணம்? சிலர் எல்லாவற்றையும் அனுபவித்து வாழும் நிலையை உருவாக்கிக் கொள்ளும்