பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

லியோ டால்ஸ்டாயின்

மாறுதல்களை என்னால் தடுக்க முடியாது. நீ என்னோடு, என்னைப் போல மாறவில்லையே என்று உன்னைக் குறை கூறவும் விரும்பவில்லை நான்.”

அதற்குப் பதிலாக, நான் உனக்கு நன்றி கூறுகின்றேன். உன்னை அன்புடன் நினைவு கூருகின்றேன். நீ எனக்கு அன்போடு வழங்கியவற்றை நான் ஒரு போதும் மறக்கவோ, மறுக்கவோ மாட்டேன்.”

அன்புள்ள சோன்யா, இறுதி வணக்கம்.
உன் அன்புள்ள
லியோ டால்ஸ்டாய்

இதே போன்ற இன்னொரு கடிதத்தையும் 1910-ஆம் ஆண்டில் டால்ஸ்டாய் தனது இல்லத்தரசிக்கு எழுதினார். வீட்டைத் துறந்து வெளியேறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால், அவர் தனது எண்ணத்தை அவரது நம்பிக்கைக்குரிய ஒரு குடியானவ நண்பருக்கும் தெரிவித்தார். அந்த நண்பரின் பெயர், மைக்கேல் நோவி கோப் என்பதாகும். அந்த நண்பருக்கும் கீழ்க் கண்டவாறு ஒரு கடிதம் எழுதினார்.

“அன்புள்ள நண்ப,

“அன்று நான் தங்களிடம் கூறியது குறித்து ஒரு வேண்டுகோள். உண்மையாகவே நான் உம்மிடம் வந்தால் எனக்குத் தவறாமல் ஒரு குடிசையைத் தங்கியிருக்கத் தருவாயா? அக் குடிசை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் தருவாயா நண்பா?”

இன்னொரு விஷயம், உனக்கு ஏதாவது நான் தந்தி அனுப்பும் நிலை வருமானால், என் பெயரை எழுதாமல், ‘டி, நிகோலீப்’ என்று குறிப்பிட்டே அனுப்புவேன். நினைவு