பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

லியோ டால்ஸ்டாயின்

ஏதாவது கண்டிருந்தால் அக்குறைகளை நீயும் மறந்து மன்னித்துவிடு. நானும் மறந்து மன்னித்து விடுகிறேன்.”

“என்னைப் பிரிந்த பின் ஏற்படுகின்ற சூழ்நிலைய மகிழ்ச்சியோடு ஏற்குமாறு நான் உனக்கு யோசனை கூறுகிறேன். எனக்குக் கடிதம் எழுத எண்ணினால் சேஷாவிடம் கூறு. நான் இருக்கும் இடம் அவளுக்குத் தெரியும். ஆனால்; அதை அவள் உன்னிடம் கூறமாட்டாள்.”

-டால்ஸ்டாய்

பின் குறிப்பு:

“என் கைப் பிரதிகளையும், மற்றப் பொருள்களையும் திரட்டி அனுப்பும்படி சேஷாவிடம் கூறியுள்ளேன்.

டால்ஸ்டாய் தான் எழுதியக் கடிதத்தை முடித்தார். பிறகு அவரது மகள் சேஷாவையும், நண்பர் டாக்டர் மெகோவிட்ஸ்கியையும் எழுப்பினார். மூவரும் துணி மூட்டைகளைக் கட்டிக் கொண்டார்கள். பிறகு, அவரும் டாக்டரும் ஒரு வண்டியில் ஏறினார்கள். சைகீனோ என்ற ரயில்வண்டி நிலையத்துக்குச் சென்றார்கள். தங்களைப் பின் தொடர்ந்து யாராவது வருகிறார்களோ என்ற அச்சத்துடன் ரயில் ஏறினார்கள்.

டால்ஸ்டாய் உள்ளம் இப்போதுதான் அமைதி பெற்றது. துறவு நியாயமான ஒரு செயலே என்பதை உணர்ந்தார். அதே நேரத்தில், அவருக்குத் தனது மனைவி மீது இரக்கம் சுரந்தது.

அன்று மாலை டால்ஸ்டாய் ஆஷ்டின் என்ற மடத்தைச் சேர்ந்தார். அங்கு அவருடைய தங்கை மேரி பெண்துறவியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள் தமையனை தங்கை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பிறகு அங்கிருந்தும் அவர் புறப்பட்டு விட்டார்.