பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவற்போர் நடத்துமிந்த சிறுபிள்ளை விளையாட்டைச் சாவோடு விளையாடும் சாகசமாய் லெனின்கருதி,

  • மிகப்பெரிய பாரத்தை

மீட்டுமிங்கு தாங்குகின்ற தகவும் பொறுப்புணர்வும்

  • கட்சிக்குத் தானுண்டு!

பெருத்த அவமதிப்பே என்றலும், பிரெஸ்டதனை 41 வருத்தத் துடன் ஏற்றுக் கொள்வதுவே வாழ்வதற்கு வழியாகும்: மூச்செடுக்க வாய்ப்பிருந்தால், நிலமதனை இழந்து விட நேர்ந்தாலும் எதிர்காலம் நமதாகும்! என்றுவழி கண்டுரைத்தார்!... இழந்திடுவோம் சிறு நிலத்தை என்றாலும், இத்தகைய வழிபிறந்தால், நம்பலத்தை வலுவாக்கி, அவர்க்கெல்லாம் குழிபறிக்கப் பின்னணி ரொரு சந்தர்ப்பம் கூடுமன்றோ ? ஆதலினால்- கருத்து றுதிப் பாட்டோடு - கட்டுறுதிப் பாடும்மைத் திருத்தழு றப் பயிற்றுவித்துச் செயலாற்றச் செய்யட்டும்.! செஞ்சேனை அணிகளிலே திரண்டிடுவீர்! தொழிலாளர் 10)