பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்தாற்போல் படையெடுத்த ராங்கெல் 4 4 பிரபவனும், கொடுத்த அடி தாங்காமல் குண்டோட்டம் ஓடி விட்டான். பின்னர் கோல் சாக்கும் 45 பெருத்த படை பலத்தோடு முன்னேறித் தாக்குதற்கு முனைந்திட்டான்! என்றாலும், பசிக்குணவு மரக்கிழங்காய், படுக்குமிடம் வெறுந்தரையாய் வசித்துவந்த வேளையிலும்--- வளர்ந்தோங்கும் பேரலையாய் செஞ்சேனை வீரர்படை முன்னேறிச் சென்றது கான்! வெஞ்சமரில் ஈடுபட்ட வீரரவர் ஒவ்வொருவர் தனக்குள்ளும் லெனின் வாழ்ந்தார்;. லெனின்காட்டும் தனியன்பை மனத்துக்குள் வீரரெல்லாம் - நன்குணர்ந்து மதித்திருந்தார். பதினோ ராயிரத்து வெர்ஸ்ட்டுக்குப் 4 6 பரந்திருக்கும் அதியசுலப் போர் முனையில் அணிதிரண்டு நின்றிருந்தார். அகலம்தான் இது! அதனின் ஆழத்தை, நீளத்தைப் புகலத்தான் அறிந்தவர்யரர்? போர் அதனில் வாசல்தொறும் பதியிட்டுப் பகைவர்படை பதுங்கி இருந்ததனால்,