பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கிவரும் சீற்றத்தால் பு!பங்கி, விமர்சகர்கள் கையில் சவுக்கெடுப்பார். கவிஞரெலாம் வெறிகொண்டு மெய்குலுங்க, என் மீது சீறி விழுந்திடுவார். ""க வியா இதுவெல்லாம்? கடைந்தெடுத்த பிரசாரம்! சுவையுண்டா ? உணர்வுண்டா? சொற்சால அலங்காரம்! என்றெல்லாம் பழித்திடுவார் என் பதையும் பானறிவேன் என்று கூறிக்கொண்டே, மயாகோவ்ஸ்கி தமது கவிதையைப் பாடத் தொடங்குகிறார். அத்துடன், எழுதடா, எழுதி விடு:- என்னிதயம் இவ்வாறு அழுத்தமுடன் சொல்கிறது. கடமை:யிட்ட ஆதனைத் தொழுது தலைவணங்கி எழுதத் தொடங்கிவிட்டேன் என்று தமது மனச்சாட்சியின் குரலுக்கும் கடமையுணர்வுக்கும் பணிந்து, இவர் பாடத் தொடங்குகிறார். அதே சமயம் ஒரு கலைஞனுக்கு-கவிஞனுக்கு இருக்க வேண்டிய தொலை நோக்கையும் இவர் துறந்து விடவில்லை. லெனின் இறந்த செய்தியைக் கேட்டதும் மாளாத் துயரத்தில் ஆழ்ந்த மக்களின் சோகத்தில், லெனின்பால் - அவர்கள் கொண்டிருந்த பாசமும் நேசமும் பளிச்சென வெளிப்படுகிறது. இத்தகைய பேரன்பை அவர்கள் லெனின்பால் காட்டுவதற்கு என்ன காரணம்? அத்தகைய சிறப்பு அவரிடம் என்ன இருக்கிறது? என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு அவற்றுக்குப் பதில் காணும் விதத்தில் லெனின் வரலாற்றை மயாகோவ்ஸ்கி பாடத் தொடங்கு கிறார். ஆயினும் லெனின் வரலாற்றை இவர் ஒரு தனி மனிதரின் வரலாறாகக் காணவில்லை. ஒரு சகாப்தத்தின் வரலாறுகக் காண்கிறார்.