பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பிக் கொதிப்பைவிடக் குளிருக்கே மிகவஞ்சித் தம்பசியைப் பொறுத்தொருநாள் தள் ளிவந்தோர் பலருண்டு. - இன்றைக்கோ- - முதியவரும், இளையவரும், வெம்பிணியால் குன்றிவிட்ட மாந்தர்களும், குழந்தைகளும், உயிர்நடுக்கும். கொடுங்குளிரில் திரண்டுவந்து க்யூவரிசைப் பேரணியில் நடுநடுங்கி நிற்கின்றார், நகரத்தார், கிராமத்தார் இரு பிரிவும் அருகருகே இணைந்தொன்றாய் நிற்கின்றார்; சிறியவரும் பெரியவரும் வருத்தத்தால் சிதைகின்றார். உழைப்பாளர் உலகமெலாம் ஒன்றுபட்டு அணிதிரண்டு யே' "வழிகடந்த காட்சி யது வையகத்தில்' லெனின் வாழ்ந்த . வாழ்க்கையதன் ஜீவன் மிகும் வடிவமெனத் தோற்றியதே. கதிரவனும் அஸ்தமனக் கதிர்க்குலத்தைப் பூமியின்மேல்

  • உதிர்த்துவிட்டு மனஞ்சோர்ந்து

ஒளிகுன்றி மறைந்து வர, சாட்டையடி பட்ட வர்போல் ' தவித்துநின் ற சீனர்களும் வாட்டமுற்றுத் தலைகுனிந்து வணங்கியவண். நின்றாரே. 128