பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மாந்து புகழ்பரப்பிச் செக்கச் சிவந்தொளிரும் கம்யூனே காட்சி தரும்!... எதை நாங்கள் காண்கின்றோம்? வித்தகராம் லெனினவர்தம் விரிந்தகன்ற பெரு நெற்றி : அத்தோடு மங்கலென 'நதேஜ்தா5 3 அவர் உருவம்....... கண்ணீ ர் கசியாத . கண்கள் எனக்கிருந்தால் இன்னும் எதையெதையோ இனம் கண்டு கொண்டிருப்பேன் . விழித்திரையில் நீர்வடியா வேளையினில், பசிழ் பொங்கிக் களிதுள் ளும் நாட்களை நான் தெளிவாகக் கண்டதுண்டு. இறந்தவர்க்குச் செய்கின்ற இறுதி மரியாதை யெனப் பறந்தாடும் கொடிகளெல்லாம் தலைதாழ்த்திப் பணிந்தனவே.

  • கடைசிவரை போரிட்டுக்

கடமை புரிந்தவரே! விடைபெறுவீர், எம்தோழ? வீயரப் புகழ்சுமந்த உந்தம் திருநாமம்

  • உலகுள்ள நாள்வரைக்கும்

எந்தம் இதயத்தில் இறவாது இலங்கிவரும்!...*37. பயங்கரம்தான்! கண்களினைப் பட்டென்று மூடிவிட்டுக் கயிற்றின்மேல் நடப்பதுபோல் கவலையை கடந்துவிடு!