பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயமென்ன? லெனின் இடத்தை நிரப்புவழி பார்ப்பதெனில் இளையவர்கள் அனைவரையும் . கட்சிக்குள் இணையுங்கள்! .. கிழவனென எனை மதித்தால் கேளுமையா இதோ எனது பேரன் இருக்கின்றான்! ஒய்.சி. எல் 72 பேரணியில் வீர இளைஞர்களை விரைவினிலே சேருகையா!" நங்கூரம் பாய்ச்சி நின்ற நந்தம். கடற்படையே! சிங்கேறு போல் இனிமேல் முன்னேறிச் சென்றிடுக! நீரெலிபோல் நுழைந்து செலும் நீர் மூழ்கிக் கப்பல்களே! நேரமிது! கடலடியில் தெருக்கோடு நீந்திடுக!

    • இந்நாளில் இங்கிருப்போம்;

- மறுநாளில் ஏ கிடுவோம். எந்நாளும் மாகடல்மேல் ஏகி மகிழ்ந்திடுவோம்!6 செங்கதிரே! வந்தெங் கள் செய்தியெலாம் கண்டிடுக! மங்கிக் கவலையுற்ற வதனத்தை மாற்றிடுக! பெற்றோர்கள் அடிச்சுவட்டில் பிள்ளைகளும் உறுதியுடன் உற் றடுத்து நடந்துகுழல் ஒ தி இசை பாடுகின்றார்: 139