பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரிலும் எவர் பெயரை இயம்பிடி னும், மற்றுமுள்ள "ஒருவரையும் அப்பெயர் தான் உணர்த்தாது போவதில்லை என்று அந்த ஒட்டுறவை இவர் குறிப்பிடுகிறார். அத்துடன் கட்சி என்பதும், மக்களின் ““ கரம், கருத்து, கண்களெலாம் எண்ணரிய லட்சோப லட்சோபக் கணக்கில் இணைந்ததொரு வடிவம்தான் என்றும் காண்கிறார். இத்தகைய கட்சியின் தலைவர் டமரணமெய்திய போது, மானிட சாகர் மே திரண்டுவந்து மரியாதை செலுத்திய காட்சியைக் கண்டு இவர் பெருமிதம் எய்துகிறார். அத்தகைய மக்கள் பேரணியில் தாமும் ஒருவனாக இருப்பதிலும் இவர் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறார், இந்நாளின் பேரணியில் யானும் ஒருவனென்ற எண்ணத்தால் மகிழ்பொங்கி எக்களிப்பு எழுதுகின்றேன். கண்ணீரும் எமக்கிடையே பொதுவுடைமைப் பொருளாகும். என்று களிப்போடு கூறுகிறார். சுருங்கச் சொன்னால், மயாகோவ்ஸ்கி லெனினது மரணத்தை யொட்டி இந்த நெடிய கவிதையை எழுதத் துணிந்த போதிலும், இதனை வெறும் சரம் கவியாகவோ, கையறு நிலையில் கதறியழும் சாவின் ஓல்மாகவோ மாற்றிவிடவில்லை. மாறாக, லெனின து மரணத்தால் விளைந்த சோக சித்திரத்தோடு தொடங்கும் இந்தக் கவிதை மீண்டும் லெனினது சல் அக்டகக் கிரியைகளோடு வந்து முடிந்த போதிலும், இந்த இருகோடிகளுக்கும் இடையே இவர் ஒரு சகாப்தத்தின் முடிவையும் நவயுகத்தின் பிறப்பையும் பற்றிய வரலாற்றையே பாடி முடித்து விடுகிறார். மேலும் சோக உணர்ச்சியோடு தொடங்கும் இந்தக் கவிதை, முடிவில் எதிர்காலம் பற்றிய தன்னம்பிக்கையுணர்வோடும், லெனின் விட்டுச் சென்றுள்ள பணியை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்ற) 'வைராக்கிய சித்தத்தோடும்தான் நிறைவு பெறுகிறது.. அமைப்பிலும் அழகிலும் புதுமையும் புரட்சியும், மிகுந்து விளங்கும் இந்தக் கவிதை, சோஷலிச எதார்த்தவாத வரலாற்றிலும் ஒரு மைல் கல்லாகும்; மயாகோவ்ஸ்கியின் இலக்கிய சிருஷ்டியிலும் சிகர கும்பமான சித்திரமாகும். 13