பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரெனிலும் போரிடுவோம்; புடை பெயர்ந்து, எங்கெங்கே நீரழைத்துச் சென்றாலும் நிழல் போலே உடன் வருவோம்! காலனிகள் இருக்குமிடம் கண்ட றியும் ஒட்டகங்கான்! சாப்னைப்போல் உயிர் குடிக்கும் கப்பற் படையினங்காள்! பாலைவனம் வழியாகப் படைதிரண்டு சென்றிடுவீர்! ஓலமிடும் கடற்பரப்பின் நுரை கிழித்து ஒட்டி டுவீர்! மேகர ரா நோயால், விவிலியத்தால்,

  • சவுக்குகளால்

நாகரிகப் படுத்திடுவீர் ... நாடுகளைச் சுரண்டுகின்ற பாதகரே! உம்மூச்சால் பாலைவனச் சோலை நிழல் மீதுலவும் காற்றெல்லாம் விஷமாகி விட்டதுலே! ஈச்சமரத் தோப்பொன்றின் இடைநடுவே, கவுக்கடியால் மூச்சடைக்கும் நீக்ரோவன் மனம் கொதித்து, மொழிகின்றான்; 'நதியே? என்னருமை நைல்நதியே ஒருநாள் நீ முதலையேனச் சீற்றமுற்று மூண்டெழுந்து பொங்கிடுவாய்! 3