பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெட்டதனை, அபராதம் விதிப்பதனை எதிர்ப்பதற்கும் தொழிலாளர் தம்மோடு தோளிணைந்து போராடும் வழிகளிலே லெனின் தந்து வாழ்வை அர்ப்பனரீத்தார். என்றாலும், 'போராட்டம் இத்தகைய பற்பலவாம் அன்றாடப் பிரச்சினைக்காய் ஆர்ப்பரித்து, அத்தோடு நின் றிடுமோ? இல்லையில்லை. நிலையான குறிக்கோளும் ஒன்றுண்டு. சோஷலிச லட்சியமே நம் குறிக்கோள். முதலாளித் தவம் நமது , முழு எதிரி; துப்பாக்கி அதனைத் தொலைப்பதற்கோர் ஆயுதமாம், இடைப்பம் அல்ல! --இந்தவொரு போராட்ட லட்சியத்தை, தொழிலாளர் சிந்தையிலும் அறிவினிலும் சென்று குடி யேறும் வண்ணம் மறுபடியும் மறுபடியும் . "லெனினவர்தாம் வலியுறுத்தி உருவேற்றி வந்திட்டார். போதமிதை நன்றாகப் புரிந்து கொண்டோர், வரு நாளில் மீதமுள்ள பேர்களுக்கும் எடுத்திதனை விளம்பிடுவார்', 39