பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மப்பேறிப் போனதொரு மமகாரம் ஏதுமின்றித் துரிதமுடன்- என்றாலும் துலங்கும்டே: jமைதியுடன்--- வருகை புரிந்திட்டார். ஏற்கெனவே போராட்டம் தன்னுள், லெனின வரால் ஈர்க்கப் பட்டிருந்த - இவரெல்லாம் இன்னும் அவர் திருவுருவைப் படம் பார்த்துத் தெரிந்து இனம் கண்டதில்லை. பதபரத்தும், குறுகுறுத்தும், பரிகாச மொழிபுகன்றும். வஞ் சினமாய்ச் சப்தமொழி வாரியிறைத்தும், அங்கு ஆஞ்சரித்துக் கொண்டிருந்த இத்தகைய சமயத்தில், எதிர்பார்த்துத் தவமிருந்த எழுச்சிப் பெருங்காற்று பதிபோட்டுப் பாய்ந்து வந்த மேதை லெனின் கைகள் தலைப் பின்புறமாய்க் கட்டிப் பிடித்த வராய் மெய்சோர்ந்து களைத்தவர்போல் மெலநடந்து வந்து நின்றார் ; கூடி நின்ற மக்களர்தம் கூட்டத்தைத் தம்கண்ணால் ஊடுருவிப் பார்த்தார் நிலைமைதனை உணர்ந்தறிந்தார்,