உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வகுப்புரிமைப் போராட்டம் ஒரு பார்ப்பன மாணவரின் சார்பில் வழக்கினைத் தொடுத்தார். அல்லாடியாரின் வீரம்! . 'கம்யூனல். ஜி. ஓ.' காரணமாக இடம் கிடைக் காத மாணவர்கள் பார்ப்பனர் மட்டுமல்ல, மற்ற வகுப்பினரும் உண்டு. அல்லாடியார், அவர்களில் ஒருவரைப் பிடித்தே கூட வழக்குத் தொடுத்திருக் கலாம். தம் வகுப்பாருக்குத் தாம் பாடுபடுவது வெளிப்படையாகத்தான் தெரியட்டுமே, இனிமேல் கூடவா 'மற்றவாள்' தயவை நாடித் தன் உயர்வைத் தேடவேண்டும்? தம் இனத்தாரைக் காக்கக் கூடவா, இலை மறைவு காய் மறைவு பார்ப்பது என்று எண்ணியிருப்பார் போலும்! வழக்கை நடத்திய நோக்கங் கூட, எந்த மாண வர்களுக்காக வழக்காடப்பட்டதோ, அவர்களுக்கு இடம் கிடைக்கவேண்டும் என்பதை விட, 'தர்மம்' நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுதான் என்று தோன்றுகின்றது. வெற்றிபெற்ற அவ் விரு மாணவனும், மாணவியுங்கூட அக் கல்லூரி களில் இப்பொழுது சேர்ந்து பயிலவில்லை என் பது குறிப்பிடத் தக்கதாகும். தமது வழக்குத் தொடுப்பதற்கு முன்பே, இலட்சிய வெற்றியைக் குறித்து, சென்னை மாகா ணக் கல்லூரியில் பேசிய அல்லாடி கீழ்க்கண்டபடி வெளியிட்டுள்ளார்: "இந்த அரசியல் அமைப்பில் காணப்படும் முக்கிய அம்சங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஒழிப்புத் திட்டமும் ஒன்றாகும். இந்த முறை இருந்து வந்துள்ளதாலேயே, நாட் டில் தொல்லைகள் பல தொடரலாயின. இதனால் வகுப்புப் பிரச்சினைகள் தீரா. மக்கள் தங்கள் மனத்திலிருந்தே வகுப்பு வாதத்தை ஒழித்தாக