உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வகுப்புரிமைப் போராட்டம் வேண்டுவது அவசியம் என்பதைப் பல்கலைக் கழ கம் உணருகிறது. நாடு முன்னேற வேண்டுமானால் கல்வித்துறை யிலும், சமுதாயத் துறையிலும் எல்லா வகுப்பின ரும் முன்னேற வேண்டும் துர்ப்பாக்கிய வசமாக தற்போது இந்து மதத்திலுள்ள பல்வேறு சாதி யினருக்கு உயர்தரக் கல்வி சமமாக அளிக்கப்பட இல்லை. இப்படிப்பட்ட நிலைமைக்கு எதுகாரணமாக விருந்தாலும், இந்த நிலைமையை மாற்றிப் பின் தங்கிவிட்ட வகுப்பாரை முன்னேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்யவேண்டியது நமது நாட்டவரின் கடமையாகும். இதற்காகச் செய்யப் படும் எந்த ஏற்பாடும் நாட்டுக்கோ, தனிப்பட்ட மனிதர்களுக்கோ எவ்வித ஊறும் (கேடும்) செய்வ தாகாது. இது நீதிக்குப் புறம்பானதுமல்ல. "சில ஆண்டுகளுக்கு முன்புவரையில் கல்வி வசதி, நாட்டில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஒரு வகுப்பாருக்கே தனிஉரிமையாக்கப்பட்டிருந் தது. ஆங்கிலக் கல்வியால் பெரும் பயன் அடைந் தவர்களும், பலன்களை அநுபவித்தவர்களும் அவர் களே யாவர். பல்கலைக் கழகப்படிப்பு அவர்க ளுக்குத் தலைமைச் சிறப்பளித்தது. அரசாங்க அலுவல்களையும் பொது வாழ்வில் உள்ள பதவி களையும் அவர்களால் கைப்பற்ற முடிந்தது. இன்றைய சமுதாய வாழ்விலுள்ள முக்கியமான பதவிகளையெல்லாம் அவர்களே பெருவாரியாகப் பற்றியிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் அழுத்த மான சாதிப்பற்று (வகுப்புவாத உணர்ச்சி) கொண்டிருக்கிறார்கள். வசதியாக இருக்கும் தங் கள் நிலையை அப்படியே நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்.