உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்பு நீதி வளர்ந்த விதம் 13 உணர்வு தொல் மரபிலே பிறந்து உரிமை கொண்ட, வீர சிவாஜியின் பரம்பரையினரும், முத்தமிழ் மன்னரின் வழிவழி வந்த குடியினரும், கட்டபொம்மு ஊமைத்துரை உறவு கொண்டவரும், கப்பலோட்டிய தமிழனின் இனத்தவரும், மற்று வீரம் மிக்கவர் யாவரும் அந்நியர் ஆட்சியை ஒப்ப மனமின்றி, எதிர்த்து நின்று உரிமைக்குப் போரா டிய வண்ணமிருந்தனர். ஆனால் அதே சமயத் தில், உரிமை உணர்வுகொண்ட நாட்டுக்குரிய நன்மக்களோடு கலத்தலின்றி, தமது இனமும், சாதியும், மொழியும், நாகரிகமும் உயர்வென்று கூறிப் பிரிந்துநின்று, தமது சுயநலமே பெரி தென மதித்தல் காரணமாகத் தாய்நாடென ஒன்றைக் கொள்ளாத ஆதிக்க வெறியர்கள், ஆ ந்நியர் ஆதிக்கம் பெற்றவுடன், அதிலே பங்கு பெற, அவர்தம் ஆங்கிலமொழியை விரைந்து கற்று, அவரது திருப்தியைப் பெறும் விதத்தி லெல்லாம் நடந்து, அரசாங்கப்பதவிகளை யெல் லாம் தாமே கைப்பற்றிக்கொண்டனர். அவர்கள் ளிற் பலரும், எஜமானருக்கேற்ற நல்ல அடிமை களாக நடந்து கொள்ளும் இயல்பிலே சிறந்திருந் ததால், அரசாங்கத்தில் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு மேலும் மேலும் வளர்ந்து வந்தது. மற்ற மக்களெல்லாம், நாட்டு விடுதலையைக் கருதி, ஆங்கில ஏகாதிபத்யத்திலே அடிமை வேலை செய்யக் கூடாதென எண்ணி இருந்ததாலேயே, நாட்டுப்பற்றற்ற மக்களாகிய ஆதிக்கவாதிகள், அரசாங்க உத்தியோக மண்டலம். முழுவதையும் கைப்பற்றிக்கொண்டு, நரிக்குக் கிடைத்த நாட்டா ண்மைபோல, ஏகபோக ஆட்சி நடத்தி வந்தனர். அதன் விளைவாக, நாட்டுக்குரியமற்ற இனத்த வர்கள், பின்னர் ஒருகாலத்தில் அரசாங்க உத்தி