பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது - } } பரவிக்கொண்டிருந்தன. ஊரின் பல பகுதிகளில் முடங்கிக் கிடந்தவர்களும் ஊர்வலம் தெற்குத் தெரு மூலைக்கு வந்து விட்டது என்று அறிவித்தபடி. தெற்குத் தெரு ஒரே ஒளிமயமாய் பகட்டும் ஆடைகள், படாடோடக்காரர்கள், கேஸ் லேட்டுகள்: ஆடும் ஆலிப் பொம்மைகள் (பூதங்கள்) பெண்ணையும் மாப்பின்ளே யையும் சுமந்த பிளஷர் கார், பூ மணம், பன்னீர் வாசனை, மத்தாப்பு நாற்றம் எல்லாம் குழம்பிய நாடக மேடையாக மிளிர்ந்து கொண்டிருந்தது. ஊர்வலம் நின்று நின்று, அவசரம் எதுவு மற்ற கதியிலே ஊர்ந்தது. சிறப்பான கல்யாணம் அது. பணத்தை பனம் என்று பாராமல் அள்ளி வீசியல்லவா கல்யாணத்தை முடிக்கிருள் நீலாவதி!' என்று பேச்சு பிறந்திருந்த், செய்யமாட்டாளா பின்னே! ராஜம் அவளது ஒரே பெண்தானே என்ருர்கள் சிலர் அவள் சேர்த்த பணத்தை எல்லாம் மகள் கல்யாணத்திலேயே கரைத்துவிடுவாள் போலி ருக்கு'... நீலாவதி தன் மகளுக்கு ஏது கல்யாணம் செய்யத் துணிஞ்சிட்டா? தன் குலமுறையையே மாற்றிவிட்டாளே”... "கல்யாணம் என்ன பெயருக்குத் தான் இருக்கும் அப்புறம் தாயைப்போலவே...இப்படிப் பலவிதமான பேச்சுகளுக்கும் அஸ்திவார மாக அமைந்து அந்தக் கல்யாணத்தின் ஊர்வலம் ஜாம் ஜாம்' என்று நகர்ந்து கொண்டிருந்தது. பகட்டான விளம்பரச் சரக்குகளும் பளபளப்பு ஆடை களும் அணிந்து குலுக்கி மினுக்கி, சாதாரணப் பெண்களைப் பார்த்துச் சிரிக்கிற மத்தாப்பு சுந்தரிகளைப்போல, வானத்து வெள்ளிகளைக் கண்டு கண்ணடித்தன மேலேறி வெடித்துத் தெறித்த அவுட்டுப் பொறிகள், சிவப்பு, பச்சை, நீலம், என்று ஒளிகாட்டி வீழ்ந்தன. கறுகிச் சிதறி மறைந்தன. ஊர்வலம் தெற்குத் தெரு முலையைத் தாண்டியது.