பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது i 33 கந்தத் தேவன் உண்மையைச் சொல்லவேண்டிய பக்குவ: நிலையை எய்தின்ை! எசமான், சத்தியமாச் சொல்லுதேன். நான்தான் தீ வச்சேன். நானூறு ரூபா வாங்கிக்கொண்டு இருநூறு ரூபா மட்டுமே பொறுமானமுள்ள பத்தலேக் கொளுத்திட்டேன்’ என்று கொஞ்சம் கொஞ்சமாகக் கக்கி ஞன்.

  • முதல்லேயே உள்ளதைச் சொல்லதுக்கென்ன? அடி உத வுத மாதிரி அப்பனும் சுப்பனும் உதவமாட்டான்கிறது சரி யாத்தானிருக்கு...சரி, யாரு உனக்கு ரூபா கொடுத்தது? யாரு தீ வைக்கச் சொன்னது? ஏன்?’ என்று அதிகாரம் செய் தார் அவர்.

அவன் சுற்றிலும் பார்த்தான். எசமான், உங்களிடம் தனியாச் சொல்லவேண்டிய விஷயம் அது என்ரு:ன். 'ஏன், இங்கேயே சொல்லேன்!” "இல்லை எசமான்...எனக்கு அதஞலே ஒண்ணுமில்லே. ஆளுல் சில பேருக்கு அதுசிரமம் உண்டாக்கும் என்று கெஞ்சி ஞன். "சரி...நீ ஏமாத்திடலாம்னு நினச்சியோ, தொலைஞ்சே... உன் வீடு கீடு எல்லாத்திலும் தீ வைக்கச் சொல்லிருவேன்... நான் எப்படிப்பட்டவன் என்பது எல்லாருக்கும் தெரியும்... நாயுடு, அவன் கட்டை அவிழ்த்திரும். இப்படி திண்ணைக்குக் கொண்டுவாரும் அவனை. முதல்லே அவன் சாப்பிடவேணும். பிறகு பேசிக்கிடலாம். பர்வதம், சோறு கொண்டுவா’ என்று ஆக்கினைகள் செய்து வைத்தார் அந்த அதிகார தேவதை! தெருவில் நின்றவர்களைப் பார்த்து ஏன் இங்கே விருதாக் கூட்டம்? வீட்டுக்குப் போங்க!' என்று கத்தினர். கூட்டம் கலந்தது. "இவரே விசித்திரமான ஆசாமி தாண்டா அடிக்கவும் செய்வாரு. அன்பா உபசரிக்கவும் செய்வாரு பெரிய மனிதர் அவர்!’ என்று ஒருவன் புலம்பிச் சென்ருன்.