பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அடங்காத சிரிப்பு தாண்டவராய பிள்ளையின் சந்நிதானத்திலே யிருந்து வெளியேறிய செல்லம் பண்டிதருக்கு எழுந்த நினைப்பு முதலில் நேரிலே பண்ணையார் வீடு சென்று பொன்னம்மா வரிடம் இப்படி விஷயம் என்று தெளிவுபடுத்திவிட வேண்டும் என்பதுதான். 'பாவம், அந்த அம்மா பெயரு ஊரிலே வீணுக அடி படுது. அந்த லெட்சணத்திலே இப்படி ஒரு புரளி வேறே கிளப்பிவிட்டால் சே, என்ன உலகம்டா இது!’ என்று எண்ணிஞர் பண்டிதர். காயங்குளத்தா இருக்காளே அவளே உசிரோடு குழி தோண்டிப் புதைக்கனும், ஆமா, சவத்து முண் டைக்கு சோருே துணியோ வேனு மின்ன இப்படியா ஏசிப் பேசி வாழிச் சொல்லியிருக்கு? அவ செய்கிற குண்டுணி வேலையும், கோளுமூட்டி விடுவதும்-இவளாலேயே ஊரிலே எத்த :ேபோ குடும்பக் கலகங்கள் வருது... எங்கிட்டே வசமா அகப்பட மாட்டேன்காளே. வாரியலாலே வெளும்பச் சாத்தி, சரியான மண்டகப்படி கொடுத்து அனுப்புவேன்...இல்லே, அவளுக்கு வேண் இண்டியதுதான் அப்படி யொரு பூசை. சாகப் போற வயசாச் , சங்கரா, சங்கரான்னு நாலு வீட்டிலே கெஞ்சி, கிடைச்சதை வாங்கி உண்டுட்டு மூலையிலே முடங்கிக் கிடக்காமே. இவளுக்கு எதுக்குங்கேன் இந்த நாரதி வேலை? யேங், இல்லே கேட்டேன்-எதுங்கு இந்தக் குசும்பு??