பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 38 வசந்தம் மலர்ந்தது. எல்லையற்று, குழம்பிப் போகிறதை-அப்படிக் குழம்பிப் போகவேண்டும் என்று எண்ணியே அவர்கள் செயல் புரிகிற ஒரு விநோதத்தை-எண்ணிப் பார்த்தார் பண்டிதர். நீலாவதி தனிப் பாதை வகுத்து, தன் மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்க முயன்ருள். செய்தாள்... அதைக் குலைக்கத் திட்டமிட்டது போல எவனே தீ வைத்துவிட் டான்...தீ வைத்தது பண்ணையார் மனைவி என்று எவளோ புரளி கட்ட நீலாவதி அதை ஏற்றுக்கொள்ளவா, வேண் டாமா என்று தடுமாறுகிருள். பண்ணையார் வீட்டம்மாஅவாேத்தான் பாரேன்! புருசலுக்கு தான் மருந்துகொடுத்து விட்டு, அத்தப் பழியை நீலாவதி மேலே போட்டுவிட்டாள்... உண்மை தெரியாமல் போகுமா?... தெரியாமல் போகட்டும்; தெரியக்கூடாது' என்றுதான் பொன்னம்மாளும், பந்தலுக் குத் தீ வைக்கத் துண்டியவனும் எண்ணுவார்கள். இருட்டு வருமா? இல்லை, இருள் மாதிரி இப்போது இருக்கிற நிலை மாருமலா போகும்?... செல்லம் பண்டிதர் நடந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டு மந்தையிலிருந்து திரும்பும் மாடுகள் விலகி நடந்தன. அவர் பார்வையிலே படவில்லே, தெருவில் விளையாடும் பையன்கள். வீடுதோரும் விளக்குச்சரம் கொடுத்துவிட்டுச் செல்லும் பூக்காரி அவர் கவனத்தைக் கவரவில்லே. எதுவும் . யாரும்-அவர் எண்ணப் போக்கையோ நடையின் துரித கதியையோ தடை செய்யவில்லே. பண்ணையார் வீட்டை அடைந்தார் பண்டிதர். நன்முக இருண்டுவி..து. சிவகுருநாத பிள்ளே வீட்டிலே இல்லை. பொன்னம்மா பளபள வென்று விளக்கிக் குளிப் பாட்டி எடுத்த திரு விளக்கை மாடத்தில் நிறுத்தி, திரியிட்டு, எண்ணெயூற்றி, விளக்கேற்றி, பொட்டிட்டு, பூவும் சார்த்தி, பக்தி சிரத்தையாகக் கும்பிட்டு நின்ருள்.