பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெறியின் விளைவு உணர்ச்சிச் சூறைகள் உந்தித் தள்ள வேகமாக முன் சென்ற பண்ணையார் சிவகுருநாத பிள்ளையின் மனிதத் தன்மை எப்பொழுதோ பறந்துபோய் விட்டது. மிருகத் தனமான வெறிதான் அவரை ஆட்கொண்டிருந்தது. ஏமாற் றப்பட்ட விலங்குபோல, :ாய்ச்சல் காட்டிக் காட்டி' கோபத்தைத் தூண்டிவிடவே ஆக்ரோஷம் கொண்டு தாக்கக் கிளம்புகிற எருமை மாதிரி, அவர் வேக நடை தடந்தார். அவர் கோபத்தின் இலக்கு அப்பாவி பொன்னம்மா தான். அவள் மருந்து வைக்கத் துணிந்த குற்றம் கிடக்கட் டும். அதை மறைக்க ஒரேயடியாகப் பொய் சொல்லி, நீலா வதி மேலே பழியைப் போட்டாளே சண் டாளி: அதனுல் தானே தனது ஆசை பெரு நெருப்பாகக் கவிந்து கண்மூடித் தனமான செயலுக்குத் தள்ளியது. இந்தச் செயலும் போகட்டும்! தன் மானத்தை-ஊரில் தனக்கிருக்கும் செல் வாக்கை. பெரிய இடத்து கெளரவத்தை--குழிதோண்டிப் புதைக்கும் முறையிலே நடந்து வந்திருக்கிருளே கள்ளி! மந் திரம் பார்க்கிறேன். பூஜை பண்ணுகிறேன் என்று தன் கண்ணிலே மண்ணைத் தூவிவிட்டு கண்டபடி திரிந்த கிறுக் கியை என்ன செய்தால் தான் தகாது? துண்டு துண்டாக வெட்டிச் சுண்ணும்புக் காளவாயில் வைத்து நீத்த வேண் டாமா அவளே? . . அவரது மனம் கோபத்தை தணியாமல் பார்த்துக் கொண்டது. ஆத்திரத்துக்கு பின்னணி வாத்திய ஒலிபோல்