பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 17 உங்களைப்போலே தங்கமான மனுஷாள் ரொம்ப அபூர்வப் பிறப்பு. உங்களே நான் என்னேக்குமே மறக்கமுடியாது. வாறேன்’ என்று புறப்பட்டார். 'வா, கந்தா என்று அழைத்தபடி கீழிறங்கிஞர். கந்தத்தேவன் தாவன்னுவின் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு, எழுந்து நடந்தான். தாவன்ன வெளியே எட்டிப் பார்த்தார். குளிர் எங்கும் நிறையும்படி, பனி விழுந்துகொண்டிருந் தது. பனிப் புகையினுள் நிழல்களாகக் கலந்து மறைத்த இரு வரையும் கவனித்து நின்ருர் கொஞ்ச நேரம் பெருமூச் செறிந்து, உள்ளேபோஞர். அமைதி நிலைத்துக் கிடந்த அந்தத்தெருவின் நிசப்தத்தை ஒருகணம் குலைத்தது டகார்’ என்று விழுந்த கதவுத் தாழ்ப் பாளின் ஒசை. மீண்டும் அமைதி... ஆழ்ந்த அமைதி, அமைதி யோடு உறவாடிக் குதித்தது பனி,