பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 74 வசந்தம் மலர்ந்தது. அவன் தலேயசைத்தான். 'அன்னைக்கு உனக்குக் கொடுத்த பணம் பூராவையும்..." அவன் முடித்தான்: அதெல்லாம் கடனுக்கும் கிடனுக்கும் கொடுத்து, அது இதுன்னு தீர்ந்து போச்சு, ஒrசமான்." "பரவால்லே, நீ திரும்பி வரும்போது பணக்காரணு விடுவே, இல்லை. எத்தனை காலம் ஒண்டியா கொளும்பிலே கஷ்டப்படுறதுன்னு நினைப்பு வந்து துன்னு சொன்ன,ரெண்டு வருசம் திரும்பி வந்திரேன்!” என்ருர். அவன் அதுக்கென்ன எசமான்' என்று சொல்லி வைத் தான். "நீ திரும்பி வந்ததும் நம்ம நிலத்திலே ஒரு குண்டு கிடக் குதே-அதுதான் அந்தக் கிணத்தடி வயலு-அதை உனக்கே பட்டா மாத்திக் கொடுத்திருதேன். உனக்கு நான் எவ் வளவு வேணும்னலும் செய்யலாம், கந்தா: குளிர் காற்று சுண்டியடித்து நடுக்கிக் கொண்டிருந்தது. அவர்கள் மெது நடை நடந்து குளத்தின் கரையோரம் வந்து சேர்ந்தார்கள். மணி என்ன நாலு இருக்காது?’ என்ருர் பண்ணையார். 'காரு வாற நேரம்தான்' என்ருன் கந்தன், எதிர்பாராத விதமாகக்காரியங்கள் வளர்ந்து விட்டதை அறிந்து, அவற்றை சுமுகமான ஒரு முடிவுக்குக் கொண்டுவர எண்ணிய பண்ணை யார் கந்தத்தேவனே. காரில் ஏற்றி அணுப்பிவிட்டுத்தான் வீடு: திரும்புவது என்று கூடவே காத்திருந்தார். பனி பலமாகப் பெய்தது. கட்டை வண்டி ஒன்றின் கீழே சக்கரத்தோடு ஒண்டி ஒடுங்கித் கிடந்த நாய் ஒன்று குளிர் தாங்க முடியாமல் ஊமைக் குரலே மெல்லிசாக இழைய விட்டு முனங்கியது. அரசமரத்தில் சடசடவென்று ஒன்றிரு பறவை கள் இறக்கைகளை அடித்துக் கொண்டன. -