பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 183 வில்லை. படுத்துப் புரண்டார் ஊஹகும். துக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை. அவர் மனம் பொன்னம்மாளைச் சுற்றித் திரிந்தது. 'பாவம்! நல்ல பெண்தான். அவளை அப்படி அடிச்சிருக்க வேண்டியதில்லை. ராத்திரி எங்கே துரங்கியிருக்கப் போரு அவ!’ என்று எண்ணிஞர். ‘விடிந்துவிட்டது. இன்னும் எழுத் திருக்கலே போலிருக்கே...துங்கு தாளா? இல்லை கோபித்துக் கிட்டுக் கிடக்கிருளா? பார்க்கலாமே என்று எழுந்து தடத் தார், இரண்டாங் கட்டு அறையிலே பொன்னம்மா கிடத் தாள். "தன்னை மறந்த தூக்கம்போலிருக்கு. தான் முதல்லே வந்தது, பெட்டியைத் திறந்தது, கதவைப் பூட்டிவிட்டு வெளியே போனது, திரும்ப வந்தது-எதுவுமே தெரியாது. அப்படித் தூங்கரு ஊம்' என்று சிரித்தார். அருகில்போய் நின்று பொன்னம்மா’ எனக் கூப்பிட வாய் திறந்தார். . ஆனல் கூப்பிடவில்லை...கூப்பிடத் தோன்றவில்லை. அவர் மனம் திக்திக் கென்று உதைத்துக்கொள்ளத் தொடங் கியது. அவர் அவசரமாகக் குனிந்து பொன்னம்மாளின் நெற்றியிலே கை வைத்தார். கையைப் பிடித்துப்பார்த்தார். மார் பைத் தொட்டுப் பார்த்தார். அடகடவுளே, இது வேறேயா!' என்று தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட் டார். அந்த உண்மையை விழுங்குவது சிரமமாகத் தானிருந் தது. பொன்னம்மா கட்டையாகிக் கிடந்தாள். ஆமாம். இவள் செத்துத்தான் போளுள். ஐயோ பாவமே' என்று ஒலித்தது அவர் மனம். இவள் முடிவு இப்படியா இருக்கணும்!...இப்படிச் செய்வ்ாள் என்று. கண்டது? பாவம், நல்ல பெண்ணு சுடு சொல்லைத் தாங்க முடியாதவ...' . N.