பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żë வசந்தம் மலர்ந்தது கிடந்த குப்பைத் தொட்டியாகக் காட்சி அளித்தது. தீ நாக்கு விட்டு முன் வாசல் நிலையையும் கொஞ்சம் பதம் பார்த்திருந் தது. ஆளுல் சேதம் ஒன்றுமில்லே. வத்து பார்த்தவர்கள் வழியோடு போனர்கள். சிலர் விட்டுக்குள் போய் நீலாவதியிடம் அனுதாபம் அறிவித்து விட்டுப் போளுர்கள். ராஜம் படுத்துக்கிடந்தாள். துரங்கு வது போல் தான் தோன்றியது. உண்மையில் தூங்கினளோ; துரங்குவது போல் கண்களை மூடிக்கொண்டு கிடந்தாளோ! நீலாவதி துயரம் தேங்கிய முகத்தோடு உட்கார்ந்து விட் உாள். யார் யாரெல்லாமோ வந்தார்கள்; போளுர்கள். மாப்பிள்ளே வந்த பாட்டைக் காணுேம். இரவு இரண்டரை மணிக்கே மாப்பிள்ளையைக் காணவில்லை என்ற உண்மை புலஞனதும் எல்லோருக்கும் பக்கு என்றடித்தது மனம். விடிந்து வெகு நேரமாகியும் வரவில்லை என்றவுடனேயே சரி தான். பையன் எங்கோ போய்விட்டான்' என்று பட்டது பலருக்கு. "ஏனப்படி சொல்லாமற் கொள்ளாமல் ஓடிப் போளுன்?' என்ற சந்தேகம் எழுந்தது. நீலாவதி கையிலே தலைவைத்து, கண்களைத் துவண்டு கிடந்த மகள் மீது பதித்து சோகமே உருவாகிவிட்டாள். தான் வளர்த்த கனவுக்கொடி நன்கு வளர்ந்து உருப்பெற்று வரும்போதே, மலரவேண்டியதருணத்தில் கறுகிப்பாழாகிப் போயிற்றே என்று தவித்தது அவள் உள்ளம். அவள் கண்ட கனவுகளின் ஆரம்பம் என்ருே, கனவுகளின் ஜீவநாடி என்ருே சொல்லவேண்டியது மகளுக்குக் கல்யாணம் செய்து அவளைக் குடியும் குடித்தனமுமாய், குலவிளக்காய் கண்டு மகிழ வேண்டும் என்ற ஆசைதான். அதற்காக எவ் வளவு உழைப்பாஇலும் சரி, பணச் செலவாயினும் சரி தன் ஒலியன்றளவு பூரணமாக ஈடுபடுத்தத் திட்டமிட்டு அப்படிச் செய்யவும் முனைந்தாள். ஆளுல் சந்தர்ப்பங்கள் சதி செய்து விட்டன. அவள் என்ன செய்ய முடியும்: